fbpx
Homeதலையங்கம்தடுப்பூசிக்கு தயங்கலாமா?

தடுப்பூசிக்கு தயங்கலாமா?

மீண்டும் மீண்டும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றியே பேச வேண்டியிருக்கிறது. திரும்பத் திரும்ப பேசியும், எழுதியும் வந்தாலும் மட்டுமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்பதால் செய்தி தாள்களும் வார இதழ்களும் தொலைக்காட்சி சேனல்களும் இதைப்பற்றியே கூடுதல் செய்திகளை வெளியிடுகின்றன.


தடுப்பூசிகளை உலக நாடுகளில் ஏற்றுக்கொண்டு தைரியமாக போட்டுக் கொள்ளும்போது நாமும் வீண் தயக்கத்திற்கும், சந்தேகத்துக்கும் இடம் கொடுக்காமல் போட்டுக்கொள்வது தான் கொரோனா அரக்கனை வேரோடு அழிப்பதற்கான வழி. தடுப்பூசி கிடைக்கவில்லை என்று புகார் சொல்லாமல் முன்கூட்டியே பதிவு செய்து எப்போது கிடைக்கிறதோ அப்போது உடனடியாக போட்டுக்கொள்ளுங்கள்.


சென்ற ஆண்டு கொரோனா முதலாம் அலையின் போது தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு என்று பேசினோம். இப்போது தடுப்பூசி வந்துவிட்டது. இனியும் தயங்கலாமா?.

படிக்க வேண்டும்

spot_img