fbpx
Homeபிற செய்திகள்‘தடுப்பூசி இல்லை’ - அறிவிப்பு பலகை வைத்த சுகாதாரத்துறை கோவை மக்கள் அதிர்ச்சி

‘தடுப்பூசி இல்லை’ – அறிவிப்பு பலகை வைத்த சுகாதாரத்துறை கோவை மக்கள் அதிர்ச்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்ற அறிவிப்பை சுகாதாரத்துறையினர் கரும்பலகையில் எழுதி வைத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட, கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது, இந்த நிலையில் மத்திய அரசால் பரிந்துரை செய்யப் பட்ட தடுப்பூசி மருந்துகளை செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முதலில் கோவை அரசு மருத்துவமனையில், இந்த தடுப்பூசிகள் செலுத்தபட்டது. ஆனால் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் வந்ததால் தடுப்பூசி மையம் கோவை அரசு கலைக்கல்லூரிக்கு இட மாற்றம் செய்யப்பட்டது.

மே 1ம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கோவையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் 45 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக தினமும் தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்கள் சுகாதாரத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன.

இந்த நிலையில் இன்று தடுப்பூசி முற்றிலுமாக இல்லை என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு அரசு கலைக் கல்லூரி வாயிலில் கரும்பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img