fbpx
Homeதலையங்கம்தனி உரிமையை பறிக்கக் கூடாது!

தனி உரிமையை பறிக்கக் கூடாது!

வாக்களிக்க வந்த பெண்ணின் ஹிஜாப்பை அகற்றக் கூறியதால் தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பூத் ஏஜெண்டு வெளி யேற்றப்பட்டார்.

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8வது வார்டு அல் அமீன் பள்ளி வாக்கு சாவடியில் இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வந்தார்.

ஹிஜாப் அணிந்திருந்த அவர் வாக்கு செலுத்துவதற்காக வாக்கு எந்திரம் உள்ள பகுதிக்கு வந்தார்.

அப்போது அங்கிருந்த பிஜேபி பூத் ஏஜெண்ட் கிரிராஜன் அந்த பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றி விட்டு வாக்களிக்குமாறு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிஜேபி ஏஜெண்ட் கருத்துக்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க, அதிமுக உள்ளிட்ட ஏஜெண்டுகள் மற்றும் அதிகாரிகள் வாக்கு பதிவை புறக்கணித்து வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிஜேபி பூத் ஏஜெண்ட் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

பின்னர் பிஜேபி பூத் ஏஜெண்ட் கிரிராஜன் கைது செய்யப்பட்டார். வாக்காளர்கள் எந்த உடை அணிந்தும் வாக்களிக்க வரலாம், ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடையேதும் இல்லை என்று தமிழக தேர்தல் ஆணையமும் அறிவித்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

தனி உரிமையை பறிக்கக் கூடாது!

படிக்க வேண்டும்

spot_img