தமிழகத்தில் வேளாண்மை, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட 7 இலக்குகளில் தன்னிறைவை எட்ட மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியபோது கொரோனா தொற்று பரவல் என்ற நெருக்கடியான காலக்கட்டத்தில் நோய் பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் பணியாற்ற வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் தடுத்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை மேலும் குறைத்திட தீவிர கவனம் செலுத்த வேண்டும். அரசு சார்பாக மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் ஏராளமாக உருவாக்கப்பட்டுள்ளன. படுக்கைகள் இல்லை என்ற புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், ஆக்சிஜன் தட்டுப்பாடும் போக்கப்பட்டுள்ளது.
ஏராளமான தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜனை பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பெற்று தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக பொறுப்புகள் கிடைத்திட மாவட்ட ஆட்சியர்கள் பணியாற்ற வேண்டும். அதிக மகசூல், வளரும் வாய்ப்புகள், நல்ல குடிநீர், உயர்தர மருத்துவம், அழகிய மாநகரங்கள் உருவாக்கம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு, அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் போன்ற 7 இலக்குகளை பத்தாண்டு காலத்தில் எட்டிட வேண்டும்.
இதற்கு மாவட்ட ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு அவசியம். நாமும் ஒத்துழைப்போம்.