சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், 24ம் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலை யில், விழுப்புரம் உள் ளிட்ட மேலும் 23 மாவட்டங்களில், இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதனால், 27 மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ்கள் இயங்கத் தொடங்கியது.
அதே நேரத்தில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், வழிபாட்டு தலங்கள் திறப்பு என, தமிழக அரசு அறிவித்த புதிய தளர்வு களுடன் கூடிய ஊரடங்கு, இன்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்று முதல், ஜூலை 5 காலை, 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மாவட்டங்களில் உள்ள நோய் தொற்று பாதிப்பின் அடிப்படையில், அவை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
மூன்று பிரிவுக்கும் வெவ்வேறு விதமான தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும், இன்று காலை, 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன.
புதிய தளர்வுகளின்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், இன்று முதல், 50 சதவீத இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஏற்கனவே பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது, இம் மாவட்டங்களில் இருந்து, மற்ற மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நான்கு மாவட் டங்களில் மட்டும், இன்று காலை, 6 மணி முதல், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு உள்ளன. அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு விழாக்கள் நடத்த அனுமதி இல்லை.
மத வழிபாட்டு தலங்கள் திறப்பால் பக் தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
இம்மாவட்டங்களில் துணிக் கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், ‘ஏசி’ வசதி இன்றி, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன், காலை, 9 முதல் இரவு, 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் பிரிவில் உள்ள, 11 மாவட்டங்கள் தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில், அனைத்து அரசு அலுவல கங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம், தொழிற்சாலைகள், 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
அரசு அருங்காட்சியகங்களும் திறக்கப்பட்டு உள்ளன. முதல் பிரிவில் உள்ள 11 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு, கூடுதல் நேரத் தளர்வு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. டீ கடைகள் காலை, 6 முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.
இதுதவிர, மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில், 27 மாவட்டங்களில் இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சேவை பாதிக்காத வகையில், போக்குவரத்து துறை சார்ந்த பிரிவு அலுவலர், மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும், பணியிடத்தில் இருந்து 8 கி.மீ.,க்குள் இருக்க வேண்டும்.
அத்தியாவசிய பணிகளுக்காக வெளியூர் செல்ல நேர்ந்தால், உயரதிகாரிகளிடம் அனு மதி பெற வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.