fbpx
Homeபிற செய்திகள்தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் ஆன விசாரணை ஆணைய அறிக்கைகள் குறித்து அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் ஆன விசாரணை ஆணைய அறிக்கைகள் குறித்து அன்புமணி ராமதாஸ் பேட்டி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம், அதே ப்ரொபஷனல் ஆக இல்லை , நுட்ப மான விளக்கம் எதுவும் அதில் இல்லை, சட்டமன்றத்திற்கும் எடுபடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அவர் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, சட்டசபையில் நேற்று தாக்கல் செய் யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத் தின் அறிக்கை மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தார்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை. அதனை வைத்து அரசியல் செய்யலாம். சட்டமன்றத்திற்கு எடுபடாது என அவர் தெரிவித்தார்.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெக தீசன் ஆணைய அறிக்கை குறித்து பேசிய அவர், அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காவல்துறையினர் இதனை பாடமாக வைத்துக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும் என தெரி வித்தார்.

படிக்க வேண்டும்

spot_img