fbpx
Homeபிற செய்திகள்தமிழக சட்டமன்ற திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு: கடிதத்தை தனிச்செயலாளர்...

தமிழக சட்டமன்ற திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு: கடிதத்தை தனிச்செயலாளர் நேரில் தந்தார்

133 சட்டமன்ற உறுப் பினர்கள் ஆதரவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்திடம் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் உரிமை கோரினார். அதனை ஏற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பு கடிதத்தை ஆளுநரின் தனிச்செயலாளர் அனந்தராவ் படேல் ஸ்டாலினிடம் நேரில் கொடுத்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க இருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்- அமைச்சராக பொறுப் பேற்க இருக்கிறார்.

சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறி வாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங் கில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் 125 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். மேலும் உதயசூரியன் சின் னத்தில் போட்டியிட்டு வென்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் பங்« கற்றனர்.

அந்த வகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 133 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளி கையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்தை இன்று (மே 5) காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் கையெழுத் திட்ட கடிதங்களையும், அமைச் சரவை பட்டி யலையும் ஆளுநரிடம் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்த நிலையில் இன்று பிற்பகலில் ஆளுநரின் தனிச் செயலாளர் அனந்தராவ் படேல் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
அப்போது ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் கடிதத்தை மு.க.ஸ்டாலினிடம் அளித்தார்.

அதையேற்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவினர் நாளை மறுநாள் (மே.7) பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மே 7-ம் தேதி காலை 9 மணிக்கு எளிமையாக நடைபெறும் எனவும், விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தோந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவினருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

மொத்தம் 28 பேர் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத் துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.

அமைச்சரவையில் மூத்த உறுப்பினர்களுடன் புதியவ ர்க ளுக்கும் அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆளுநரை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலி னுடன் துரைமுருகன், டி.ஆர், பாலு, கே.என். நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img