fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் பருத்தி அபிவிருத்தி ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் பருத்தி அபிவிருத்தி ஆலோசனைக் கூட்டம்

அகில இந்திய பருத்தி அபிவிருத்தி திட்ட வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் மற்றும் வீரிய ஒட்டு பருத்தி தொழில்நுட்பத்தின் பொன்விழா நேற்று (ஏப்.6) கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை. வளாகத்தில் துவங்கியது.

மூன்று நாட்கள் நடை பெறும் இவ்விழாவை, தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழகம் மற்றும் மத் திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத் துகின்றன.

ஐஎஸ்சிஐ மும்பை தலைவர் முனைவர் ஏ.ஜே.ஷாகி வரவேற்றார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை துணை வேந்தர் முனைவர் வி.கீதாலட்சுமி துவக்கி வைத்து பேசியதாவது:

ஒருங்கி ணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். விஞ்ஞானிகள், விவசாயி கள் இடையே உள்ள இடை வெளியை குறைத்து பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றார்.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக பொதுச் செயலாளர் முனைவர் திரிலோசன் மொகபத்ரா தலைமை தாங்கி பேசுகை யில், அடர் நடவு முறை மற்றும் இயந்திர நடவு முறை ஒற்றை மற்றும் இயந்திர முறை அறுவடை மற்றும் மரபணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பருத்தியில் மகசூலை அதிகரிக்க வேண் டும் என்றார்.

இந்திய பருத்தி அபிவிருத்திக் கழக தலைவர் முனைவர் சி.டி. மாயி, தமிழ்நாடுவேளாண் பல்கலை ஆராய்ச்சி இயக்குநர் கே.எஸ்.சுப்பிரம ணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர் முனைவர் ஏ.எச்.பிரகாஷ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img