fbpx
Homeபிற செய்திகள்திருநெல்வேலி மாவட்டத்தில் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா: கண்காட்சியை பல்லாயிரம் பேர் பார்த்தனர்

திருநெல்வேலி மாவட்டத்தில் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா: கண்காட்சியை பல்லாயிரம் பேர் பார்த்தனர்

திருநெல்வேலி மாவட்டத்தில் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சி பள்ளி மாணவ, மாணவிகளிடையே ஓவிய, கட்டுரை, கவிதைப் போட் டிகள் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்ச்சியில் இம்மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கானவர்கள் பார்வையிட்டனர்.

மேலும் மகளிர் திட்டம் மூலம் நெல் லை கிராப்ட் கண்காட்சி மாற்றுத் திறனாளிகள் துறை, வனத்துறை பள்ளிக்கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளின் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

பள்ளி மாணவ- மாணவியர் களுக்கான சுதந்திர தின அமுதப்பெருவிழா என்ற தலைப்பில் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப் போட்டிகள் புத்தகத் திருவிழா அரங்கில் நடைபெற்றன.

இப்போட்டியில் திரளாக மாணவ&மாணவியர்கள் கலந்து கொண்டு சுதந்திர போராட்டம் பற்றி கவிதைகள் எழுதி சமர்ப்பித்தனர். மேலும், ஓவியங்களும், கட்டுரைகளும் தயார் படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப் பட்டது.

இதில் ஓவியப்போட்டியில் ஜவஹர் தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் சஞ்ச் சண்முகம் இரண்டாம் இடமும், ரூபலெட்சுமி மூன்றாம் இடமும் தேர்வு பெற்றனர். கட்டுரைப்போட்டியில் டோனாவூர் உவாக்கர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி உஷா முதல் இடமும், பத்தமடை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஷேக்மைதீன் இரண்டாம் இடமும், பர்கிட்மாநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஜெயா மூன்றாம் இடமும் தேர்வு பெற்றனர்.

கவிதைப் போட்டியில் மன்னார்புரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி லெட்சுமி முதல் இடமும், கடம்போடு வாழ்வு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் இரண்டாம் இடமும், பொட்டல் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி சந்தியா மூன்றாம் இடமும் தேர்வு பெற்றனர்.

இந்த மூன்று போட்டிகளில் முதல் மூன்று இடம் தேர்ச்சி பெற்ற மாணவ&மாணவியர்களுக்கு புத்தக திருவிழா நிறைவு நாளில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங் கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img