திருப்பூரில் கலைஞர் கருணாநிதி 98-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தெற்கு தொகுதி மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.நாகராஜ், வடக்கு தொகுதி மாநகர பொறுப்பாளர் நா.தினேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.