fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் குறைந்து வருகிறது அமைச்சர் சாமிநாதன் தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் குறைந்து வருகிறது அமைச்சர் சாமிநாதன் தகவல்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் தெக்கலூர் பகுதியில் இயங்கி வரும் தி சென்னை சில்க்ஸ் குமரன் தங்கமாளிகை மற்றும் எஸ்.சி.எம் குழுமத்தின் ஒரு அங்கமான ஏ.கே. வி.என் மருத்துவமனையில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து துவக்கப்பட்டுள்ளது. இதில் 80 படுக்கை வசதிகள் உள்ளது.


இந்த மருத்துவமனையை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

பொதுமக்கள் இன்னும் ஒரு சில பேர் தேவை இல்லாமல் வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும். சிறிய அறிகுறிகள் தென்பட்டால் கூட உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனக்கூறிய அமைச்சர் மேலும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு தமிழக அரசு முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அனைவரும் இதை மனதில் கொண்டு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த விழாவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், தீ சென்னை சில்க்ஸ் குமரன் தங்கமாளிகை குழுமத்தின் நிர்வாகிகள் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img