திருப்பூரை சேர்ந்த மோகன் என்பவர் தனது குடும்பத்துடன் தாராபுரம் சாலையில் வசித்து வருகிறார். இவரது மகன் ரித்திக் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் யூ டியூபில் தனியாக சேனல் துவங்கி நடத்தி வருகிறார்.
தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் அதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனைவரும் நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ரித்திக் யூ டியூப் மூலம் தனக்கு வரும் ஒரு மாத வருமானத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனை தனது தந்தையுடன் சென்று நேரில் சந்தித்த ரித்திக் தனது ஒரு மாத வருமானமான 10800 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.