fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நேற்று திருவண்ணாமலை புதுகார்கானா தெருவில் உள்ள கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1707 நியாய விலை கடைகள் மூலம் 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடும்ப அட்டைகள் விவரம் : கூட்டுறவு 7,75,099 குடும்ப அட்டைதாரர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 3,326 குடும்ப அட்டைதாரர்கள், மகளிர் கடைகள் 4,750 குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் 1107 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 7,84,282 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கள் பரிசு தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை இணைபதிவாளர் மாவட்ட வழங்கல் அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img