fbpx
Homeபிற செய்திகள்திறமைசாலிகளை கண்டறிய ஜெயாமேக்ஸ் ஸ்டார்ஹன்ட் போட்டி

திறமைசாலிகளை கண்டறிய ஜெயாமேக்ஸ் ஸ்டார்ஹன்ட் போட்டி

இந்தியாவின் நம்பர் ஒன் குறு-வீடியோ செயலியான மோஜ், ஜெயா மேக்ஸ் அலைவரிசையின் ஒத்துழைப்போடு #JayaMaxStarHunt என்ற பெயரில் தமிழ் திறமைசாலிகளை கண்டறிவதற்கான போட்டியை நடத்துகிறது.

பிரமாதமான, திறன்மிக்க படைப்பா ளிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான மேக்ஸ் மெர்ஸல் மற்றும் மேக்ஸ் ரீச் அவுட் ஆகியவற்றில் இடம்பெறுவதற்கான வாய்ப்பினை வழங்கும்.

அனைத்து வயது பிரிவையும் சேர்ந்த தமிழ் படைப்பாளிகள் அனைவரும் பங்கேற்பதற்கான ஒரு ஆடிஷன் நிகழ்வாக இந்த டேலன்ட் ஹன்ட் நடத்தப்படுகிறது.

இப்போட்டியில்#JayaMaxStarHunt என்ற ஹேஷ்டேக் உடன் மோஜ் செயலியில் அவர்களது திறமைகளை காட்சிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சிறப்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் விருப்பமுள்ள எவரும் பங்கேற் கலாம்.

மேக்ஸ் மெர்ஸல் மற்றும் மேக்ஸ் ரீச்அவுட் போன்ற பிரபல நிகழ்ச்சிகளை பிற தொகுப்பாளர்களோடு இணைந்து வழங்குவதற்கான அரிய வாய்ப்பு ஒவ் வொரு படைப்பாளிக்கும் கிடைக்கும்.

ஷேர்சாட் மற்றும் மோஜ் ன் உள் ளடக்க உத்தி மற்றும் இயக்கத்திற்கான முதுநிலை இயக்குனர் ஷஷான்க் சேகர் கூறியதாவது:

திறமைசாலிகள் தென்னிந்தியாவில் இருக்கின்றனர் என்பதை எவரும் மறுக்க இயலாது. தமிழ்நாடு முழுவதற்கும் #JayaMaxStarHunt என்ற போட்டி நிகழ்ச்சியினை ஜெயா மேக்ஸ் அலை வரிசையுடன் இணைந்து தொடங்குவதில் உற்சாகம் கொண்டிருக்கிறோம்.

இந்த டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துவதன் வழியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறப்பான திறமைசாலிகளை அடையாளம் காண்ப தோடு நின்றுவிடாமல் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற்று அவர்களது கனவுகளை நனவாக்கவும், பிரபலமாகி புகழ்பெறவும் ஒரு தளத் தையும் வழங்க விருக்கிறோம்.

சமூக ஊடகம், தொலைக்காட்சி ஆகிய இரண் டின் கலவையாக நடைபெறவுள்ள இது திறமையும், ஆர்வமும் தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் வர வேற்பைப் பெறும் என்று உறுதியாக நம்புகிறோம், என்றார்.

2022 ஏப்ரல் 21ம் தேதி வரை இப்போட்டிக்கான விண்ணப்பங்களை ஜெயா மேக்ஸ்ஸ்டார் ஹன்ட் ஏற்றுக் கொள்ளும் மோஜ் செயலியில் எந்த வொரு பிரிவிலும் லிப்- சிங்க், நடனம் அல்லது நடிப்பு ஆகியவற்றில் தங்களது வீடியோக்களை படைப்பாளிகள் பதி வேற்றம் செய்யலாம்.

படிக்க வேண்டும்

spot_img