fbpx
Homeதலையங்கம்துணிச்சலான முடிவு

துணிச்சலான முடிவு

மருத்துவ நிபுணர்கள் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் 3வது அலையும் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. தடுப்பூசி போடாத மாணவர்களை தேர்வு எழுத வரச்செய்வது தொற்றை அதிகரிக்கச் செய்யும் என்று நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

ஆனால் உலகளவில் தேர்வை தள்ளி வைத்துக் கொண்டே போனால் மாணவர்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கும் என்றும் ஆலோசனை கூறினர்.


இதையெல்லாம் சீர்தூக்கி பார்த்து இந்த ஆண்டு பிளஸ்&2 தேர்வை ரத்து செய்யும் உயிர்காக்கும் முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்தது மிக மிக பாராட்டுக்குரியது.

இந்த நிலையில் உயர் படிப்புக்கு செல்வதற்காக எந்த வகையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது? என்பதை முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்துள்ளார்.


அந்தக்குழு அளிக்கும் பரிந்துரையின் பேரில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பல கல்வியாளர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ‘ஏற்கெனவே 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து இருக்கிறது.
அந்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

பிளஸ் 2 தேர்வுக்கு செயல்முறைத் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. அதனையும் உள்மதிப்பீட்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கினால் எந்தவித சட்ட சிக்கல்களும் இருக்காது’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வையும் ரத்து செய்யவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.

எப்படி மாணவர்களை ஒரே இடத்தில் அமர வைத்து பிளஸ்&2, சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வுகளை எழுத வைத்தால் கொரோனா பரவல் தொற்றிவிடும் என்ற அச்சம் இருக்கிறதோ, அந்த அச்சம், அதே காரணங்கள் நீட்தேர்வுக்கும் பொருந்தும்.


எனவே பிரதமரும், மத்திய அரசாங்கமும் இந்த ஆண்டு நீட் உள்பட அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது தான் பொதுவான கருத்தாக இருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img