fbpx
Homeபிற செய்திகள்தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்: தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேஷன்...

தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்: தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேஷன் நேரில் ஆய்வு

கோவை அரசு மருத்துவமனையில் நடந்து வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம் தலைவர் வெங்கடேஷன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை அரசு மருத் துவமனையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி சார்பில் 100 வார்டுகளில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் முகாம் முன்னதாக நடந்த நிலையில் இன்று இரண்டாவதாக இலவச மருத்துவ முகாம் நடைபெறுகின்றன.

கோவை அரசு மருத் துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடை பெற்று வருகிறது

இந்த நிலையில் கோவை வந்த தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம் தலைவர் வெங்கடேஷன் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகின்ற தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடைபெறுகின்ற இடத் திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளரிடம் தங்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வில் அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் சர்மிளா, மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந் தனர்.

படிக்க வேண்டும்

spot_img