fbpx
Homeதலையங்கம்நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்!

நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்!

முதல்வர் ஸ்டாலின் சொல்வதைப் போல் பொது முடக்கம் என்பது பலரது வாழ்வையும், வாழ்வாதா ரத்தையும் தொழிலையும் பாதித்துவிடும்.

எனவே தான் தொடர் உற்பத்தி நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உபயோகிப்பாளர்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை இயக்க முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் தமிழகத்தில் சற்று குறைந்திருந்தாலும் இது ஏற்றத்தாழ்வு நிலையிலேயே உள்ளது. கொரோனா பீதியில் சாதாரண, நடுத்தர மக்கள் எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டில் முடங்கி கிடந்து பணிக்கு செல்லாமல் இருக்க முடியும். எதற்கும் ஒரு கால வரம்பு உள்ளது.


ஆகவே மே 24ம் தேதிக்கு பிறகு தளர்வுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தலாம் அல்லது ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கலாம். அதே நேரத்தில் சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணி செய்யவும் முகக்கவசம் அணிந்து தங்கள் பணிகளை அவர்கள் மேற்கொள்ளவும் அனுமதிக்கலாம்.

குறைந்த அளவில் தொழிலாளர்களுக்கென்று சிறப்பு பேருந்து களை இயக்கி அவர்கள் பணிக்கு செல்வதற்கான வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கலாம். மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு இதனை செயல்படுத்தக்கூடும் என்று எதிர்பார்ப்பது தவறாகாது.


தொழில்துறையினருக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை களைவதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி மையத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் கொரோனா பெருந் தொற்றானது மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு மீது பெரும் அழுத்தத்தை உண்டாக்கியுள்ளது. இருந்தாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைத்து முன்களப் பணியாளர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பணி பாராட்டத்தக்கது.


நமக்கு நாமே பாதுகாப்பாக இருந்து வாழ்வாதாரத்தையும் தேடிக்கொள்வோம். தமிழக அரசும் இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டட்டும்.

படிக்க வேண்டும்

spot_img