fbpx
Homeபிற செய்திகள்‘நல்ல கல்வியைவிட பெரிய முதலீடு ஏதும் இல்லை’ ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தகவல்

‘நல்ல கல்வியைவிட பெரிய முதலீடு ஏதும் இல்லை’ ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தகவல்

ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 16-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கடந்த 15-ம் தேதி நடந்தது.

தலைமை வகித்த எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, திருப் பதி, இந்திய தொழில்நுட்ப நிறுவன முன்னாள் பேராசிரியர் மற்றும் டீன், கே.கிருஷ்ணய்யா ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

நிர்வாக அறங்காவலர் பேசியதாவது: பட்டதாரிகள் வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவ தற்கு வாழ்த்துகள். கல்வி என்பது மதிப்பெண்கள் மட்டுமல்ல, வளர்ச்சியும் தான்.

மனிதகுலத்தின் நலனுக்காக தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தவும், இந்த நாட்டின் மக்கள் மத்தியில் பொது நல்வாழ்வை தொழில் நுட்பம் மேம்படுத்துவதை பட்டதாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பட்டதாரிகளுக்கு கல்வி என்பது ஒரு வாழ்நாள் செயல்முறை. இந்த புதிய கட்டத்தில், புதிய நண்பர்களைக் கண்டுபிடிப்பார்கள். புதிய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்.

வாழ்க்கையின் அந்த சவாலான கட்டங்களில், வெற்றிக்கான முக்கிய கூறுகளான நேர்மை மற்றும் தைரியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் டி.லட்சுமி நாரா யணசுவாமி.

முதன்மை விருந்தி னர் பேராசிரியர் கே. கிருஷ்ணய்யா பேசும் போது, நல்ல கல்வியை விட பெரிய முதலீடு எதுவும் இல்லை. சுவாமி விவேகானந்தர், மைக்கே லேஞ்சலோ, பால் கோய ல்ஹோ, கன்பூசியஸ் ஆகியோரை மேற்கோள் காட்டி வாழ்க்கைக்கான இலக்கை நிர்ணயிப்பதன் முக்கியத்துவத்தை தெரியப்படுத்தினார்.

அர்த்தமுள்ள, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு மதிப்புகளுக்கு இணையான வேலையைத் தேட வேண்டும்.

தொழில் துறை, புரட்சிகளின் வரலாறு, எதிர்காலம் மற்றும் ப்ளூம்ஸ் வகை பிரித்தல் நிலைகளில் வேரூன்றியிருக்கும் அங்கீகார செயல்முறை எவ்வாறு பட்டதாரிகளின் எதிர்கால வேலைத் தேவைகளின் சவால் களைக் கையாள்வது என எடுத்துரைத்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர் மு.பால்ராஜ், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img