fbpx
Homeபிற செய்திகள்நிதி திரட்ட கைகொடுக்கும் “மிலாப் 360”

நிதி திரட்ட கைகொடுக்கும் “மிலாப் 360”

இந்தியாவின் முதல் “ஆல் இன் ஒன்” டிஜிட்டல் நிதி திரட்டும் தீர்வான மிலாப் 360 (Milaap 360) ஐ அறிமுகப்படுத்துவதாக Milaap.org அறிவித்துள்ளது.

மிலாப்பின் இந்த புதிய தளமானது நிதி திரட்டுபவர் நிதி அளிக்கும் தனி நபர் அல்லது நிறுவனத்துடன் தொடர்புகொள்ளும் வகையில் தொடர்ச்சியான நன்கொடைகள், லைவ் ஸ்ட்ரீமிங், அதிர்ஷ்ட குலுக்கல், உறுதிமொழி உள்ளிட்ட பல்வேறு நிகழ் நேர ஒருங்கிணைப்பு கருவிகளை அளிக்கும்.

உலகளாவிய டிஜிட்டல் மயமாக்கல் உலகம் முழுவதிலும் பல்வேறு புதிய சிந்தனைகள், மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. தொழில் சார்ந்த விஷயம் தொடங்கித் தனிப்பட்ட தேவைகள் வரை மக்கள் தற்போது எல்லாவற்றிலும் ஆன்லைனை விரும்புகின்றனர்.

அதிலும் குறிப்பாக மிகப்பெரிய தொற்று காலத்தில், ஒரு விஷயத்துக்காக நிதி திரட்டுவது மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்வது புதிய பரிமாணத்தைக் கண்டது.

தற்போது நடைமுறையில் உள்ள நேரடி நிதி திரட்டும் முறையுடன் இணைந்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங், ஆன்லைன் ஏலம், உறுதிமொழி, சவால்கள், சேகரிப்புகள் என சமீபத்திய டிரெண்டுக்கு ஏற்ப ஆன்லைன் முறையில் செயல்படத் தொடங்கின.

இது குறித்து இந்தியாவின் முதல் கட்டணமின்றி பொது மக்களிடமிருந்து நன்கொடை திரட்டும் நிறுவனமான Milaap.org ன் இணை நிறுவனரும் தலைவருமான அனோஜ் விஸ்வநாதன் கூறுகையில், “வாடிக்கையாளர்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு அளிப்பதில் நம்பிக்கை கொண்ட நிறுவனமான மிலாப் 360 தொடர்ந்து மாறிவரும் இந்த உலகில் வெற்றிகரமான நிதி திரட்டல்களை, தங்கள் தேவைக்கு எற்ற மாற்றி அமைத்துக்கொள்ளும் வகையில் மேம்பட்ட மற்றும் தடையற்ற முறையில் மேற்கொள்ள, அமைப்பாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த தீர்வாக இருக்க முயற்சிக்கிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img