fbpx
Homeபிற செய்திகள்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சட்டத்துறையின் பங்களிப்பு அளப்பரியது ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் தகவல்

நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சட்டத்துறையின் பங்களிப்பு அளப்பரியது ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் தகவல்

நிறுவனங்களின் வளர்ச் சிக்கு சட்டத்துறையின் பங்களிப்பு அளப்பரியது என்று மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா குழுமங்களின் சட்ட விவகாரங்கள் பொது ஆலோசனை மற்றும் செயல் துணைத்த லைவர் நவீன் ராஜூ தெரிவித்தார்.

கோவை, நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின், மேலாண் மைத்துறை (எம்.பி.ஏ.), முதுநிலை வணி கவியல் துறை (எம்.காம்.), முதுநிலை வணிகவியல் மற்றும் பன்னாட்டு வணி கம் (எம்.காம். ஐ.பி.) ஆகிய துறைகள் இணைந்து நடத் திய ‘நேருக்கு நேர் சந்திப்பு’ நிகழ்ச்சி, நேற்று (ஏப்.5) நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் டாக்டர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்துப் பேசினார். மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா குழுமங்களின் சட்ட விவகாரங்கள் பொது ஆலோசனை மற்றும் செயல் துணைத்தலைவர் நவீன் ராஜூ சிறப்பு விருந்தி னராகக் கலந்து கொண்டு, ‘நேருக்கு நேர் நிகழ்ச்சி’ மூலமாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கேள்வி களுக்குப் பதிலளித்தார். அவர் கூறியதாவது: நம் நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட்டு வருகின்றன.

நிறுவனங்களின் வளர்ச்சியில் சட்டப்பிரிவு மிகவும் முக்கியமானது. இத்துறை அரசு, தனியார், ரியல் எஸ்டேட் துறைகளில் முக்கியப் பங்காற்றுகிறது. ஒவ்வொரு நிறுவனத்தின் அடிப்படை மேம்பாடு, அறிவுசார் சொத்துரிமை, பதிப்புரிமை, முத்திரை போன்றவை சட்டப்பிரிவால் பாதுகாக்கப்படுகின்றன.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் புதுமைகளை உருவாக்கி, முழுவடிவம் பெறுவது வரை சட்டப் பிரிவு துணை புரிகிறது.
சமீப காலமாக நிறுவனங்களில் பல்வேறு பகுதிகள் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன.

பல்வேறு நிறுவனங்களுக்கு பலவிதமான தகவல்கள் தேவைப்படுகின்றன. அவற்றில் மருத்துவ ஆவணங்கள், மதிப்பு மிக்க தகவல்கள், தனிநபர் தரவுகள் போன்ற வற்றை உரியவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த முடியாது.

அதனால் தகவல்களைச் சேகரிப்பது மிகவும் சவாலானது. நிறுவனங்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. அதன்மூலம் சைபர் செக்யூரிட்டி, நிதி தரவுகள் பாதுகாக்கப்படுகின்றன.

வருங்காலத்தில் நிறுவ னங்களில் பணி புரிய தயாராகும் மாணவர்கள், தொழில் முனைவோர் களாக விரும்புப வர்கள் சவால்மிக்க இந்த உலகை எதிர்கொள்ள தயாராக வேண்டும். டிஜிட்டல் உல கில் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண் டும். இவ்வாறு நவீன் ராஜூ கூறினார்.

நிகழ்ச்சியில் மேலாண்மைத்துறை இயக்குநர் டாக்டர் ஜெ.பாமினி, வணிகவியல் துறைத்தலைவர் டாக்டர் வி.நிர்மலாதேவி, பன் னாட்டு வணிகத்துறைத் தலைவர் டாக்டர் ஐ.பர் வீன்பானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img