fbpx
Homeபிற செய்திகள்நிறுவனங்கள் சட்டம் அட்டவணையில் மாற்றங்கள்: இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆப் இந்தியா கருத்து

நிறுவனங்கள் சட்டம் அட்டவணையில் மாற்றங்கள்: இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆப் இந்தியா கருத்து

நிறுவனங்கள் சட்டம் அட்டவணை III–ல் சமீபத்திய மாற்றங்கள் மற்றும் சிஎஸ்ஆர் விதிகளின் விமர்சன ஆய்வு குறித்து இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆப் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆப் இந்தியா (ஐசிஎஸ்ஐ) செயல்படுகிறது.

இதன் கிளை அலுவலகங்கள் புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ளது. இது பார்லிமெண்ட் சட்டத்தின் கீழ், அதாவது, கம்பெனி செயலர்கள் சட்டம், 1980ன் கீழ், இந்தியாவில் உள்ள நிறுவனச் செயலர்களின் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அமைக்கப்பட்ட முதன்மையான தொழில்முறை அமைப்பாகும்.

இது இந்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படுகிறது.

இந்த இன்ஸ்டிடியூட் இதன் மாணவர்களுக்கு தரமான பாடத்திட்டங்களை வழங்க வேண்டும் என்பதிலும் அதன் உறுப்பினர்களுக்கு சிறந்த தர நிலைகளை வழங்க வேண்டும் என்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறது.

இந்த நிறுவனத்தில் 67 ஆயிரம் உறுப்பினர்களும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களும் உள்ளனர்.

இதன் தலைவர் சி.எஸ். தேவேந்திர வி தேஷ்பாண்டே, துணைத் தலைவர் சி.எஸ். மணிஷ் குப்தா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தொழில் நோக்குநிலை, தொழில்முறை மேம்பாட்டு திட்டங்கள், பிராண்ட் கட்டமைப்பு, டிஜிட்டல் புரட்சி, அங்கீகாரங்கள், எல்லைகளை விரிவுபடுத்துதல், உறுப்பினர்களுக்கான முன்முயற்சிகள், மாணவர்களுக்கான முன்முயற்சிகள், கல்வி ஒத்துழைப்புகள், சமூக முயற்சிகள், கட்டண விலக்குகள், விரிவான ஆராய்ச்சி திட்டங்கள், மறு அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, எதிர்கால ஆய்வு மற்றும் தொழிலின் உலகமயமாக்கல் ஆகியவற்றில் எங்கள் இன்ஸ்டிடியூட் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றனர்.

ஐசிஎஸ்ஐ யுடிஐஎன் அல்லது தனிப்பட்ட ஆவண அடையாள எண் என்பது ஒரு அமைப்பில் உருவாக்கப்பட்ட ஆல்பா எண்ணியல் எண் ஆகும். இது நடைமுறையில் உள்ள உறுப்பினர்களால் வழங்கப்படும் சான்றளிப்பு/சான்றிதழ் சேவைகளின் பதிவேட்டைப் பராமரிப்பதை எளிதாக்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img