fbpx
Homeபிற செய்திகள்‘நெஞ்சு பொறுக்குதில்லை’ நூல் வெளியீட்டு விழா

‘நெஞ்சு பொறுக்குதில்லை’ நூல் வெளியீட்டு விழா

தேசக் கவி பாரதியின் நினைவு ஆண்டினை முன்னிட்டு வெள்ளலூர் இலக்கிய மன்ற விழா கோவை ரவுண்ட்டேபிள் கட்டிடத்தின் ராயல் கேர் மருத்துவமனை வெள்ளலூர் வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் மயில் மணி அறக்கட்டளையின் சார்பாக “நெஞ்சு பொறுக்குதில்லை” என்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியரின் கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

பேராசிரியர் கவிஞர் ஆதித் சக்திவேல் முன்னிலை வகிக்க கவிஞர் நிலாபாரதி தலைமையேற்றார். விழாவிற்கு வந்த அனைவரையும் வெள்ளை விழுதுகள் அமைப்பை சார்ந்த கேச வன் வெங்கடேஸ்வரன் வரவேற்றுப் பேசினார்.

தமிழ்வயல் இலக்கிய அமைப்பு தலைவர் முனை வர் ம.இளங்கீரன், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், பொதுப்பணி சேவையில் ஈடுபட்டு செயலாற்றி வரு வோர்களுக்கு விருது கள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.

புத்தகத்தை வார்த்தை சித்தர் மா.சோ. சுப்பையன் வெளியிட தமிழ்த்தொண்டர் தம்பிதுரை, நிறுவனர் பாரதிதாசன் இலக் கிய பேரவை மற்றும் வழக்கறிஞர் வி.வி.நாகராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சக்தி பில்டர்ஸ் நிறுவனர் கவிஞர் வி.பி. மாரியப்பன் மற்றும் தில கம் பதிப்பகம் மற்றும் வெ.கோ.பாலதண்டபாணி “காலந்தோறும் வெள்ள லூர்” நூல் ஆசிரியரும் வெள்ளலூர் இலக்கிய மன்ற நிறுவனருமான கவிஞர் தி.துரைசாமி, வெள்ளலூர் இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக மயில்மணி அறக்கட்டளை நிறுவனரும் நூல் ஆசிரியருமான சோ.ம.ஜெயராசன் வாழ்த்துப் பாடலையும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினை சார்ந்த வீரமணி வெள்ளலூர் தொண்மை பற்றிய சிறப்பு பாடல்களையும் பாடினார் கள். நிறைவில் முத்தமிழ் கவிஞர் கு.முனுசாமி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img