fbpx
Homeதலையங்கம்நேரக்கட்டுப்பாடு தேவையில்லை!

நேரக்கட்டுப்பாடு தேவையில்லை!

கொரோனாவிற்கு பிறகு ஹோட்டல்கள் மெதுவாக பழைய நிலையை அடைந்து வருகிறது. பேருந்து, ரயில் நிலையப் பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் தற்போது இரவு 10.30 மணி வரை மட்டுமே செயல்பட்டு கொண்டிருக்கிறது.

2019ம் ஆண்டில் உணவு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் சென்னை உயர்நீதிமன்றமும் கூட ஒரு உத்தரவில் உணவகங்கள் மூடும் நேரத்தை உரிமையாளர்கள் அவர்கள் வசதிக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய சுதந்திரம் உள்ளவர்கள் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் காட்டி உணவகங்களை மூடுவதற்கு போலீசாருக்கு அதிகாரம் இல்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் கோவை உள்ளிட்ட மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் கூட இரவு 11 மணிக்கு மேல் கடைகள் செயல்படுவதற்கு போலீசார் அனுமதிப்பதில்லை.

பேருந்து, ரயில் நிலையங்களில் இரவு முழுவதும் கடைகள் செயல்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இரவு முழுவதும் உணவகங்களை செயல்பட அனுமதிப்பதன் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 1500க்கும் மேற்பட்ட உணவகங்களுக்கு உதவியாக இருக்கும்.

அத்துடன் உணவுத் துறையும் சுற்றுலாத்துறையும் மேலும் வளர்ச்சி பெறும்!

படிக்க வேண்டும்

spot_img