fbpx
Homeபிற செய்திகள்நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் மருத்துவ மாணவிக்கு நிதி உதவி

நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் மருத்துவ மாணவிக்கு நிதி உதவி

பன்னாட்டு அரிமா சங்கம் 324 சி அதிகாரப்பூர்வ ஆளு நர் வருகை நிகழ்ச்சி கோவை காளப்பட்டி, குரும்ப பாளையம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

கோவை நேரு நகர் அரிமா சங்கம், ராயல்ஸ் அரிமா சங்கம், காளப் பட்டி சிறகுகள் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் நேரு நகர் அரிமா சங்க தலைவர் எஸ்.செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார்.

பன்னாட்டு அரிமா சங்க மாவட்ட ஆளுநர் ஏ. நடராஜன் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கல்வி உதவித்தொகை, உறுப்பினர் சான்றிதழ், லயன்ஸ் பின், புத்தகம், நினைவு பரிசு மற்றும் பல் வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மருத்துவ மாணவி மதுமிதாவுக்கு மாதம் பத்தாயிரம் வீதம் ஐந்தரை ஆண்டுகள் படிப்பிற்கு ரூ.5.50 லட்சம் நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் வழங்கப்படுகிறது. முதல் தவணையாக ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி தொகையை மாவட்ட ஆளுநர் நடராஜன் தலைவர் செந்தில்குமார் வழங்கினர்.

இதில் மாவட்ட முதல் பெண்மணி கலாமணி நடராஜன், கோவை நேரு நகர் அரிமா சங்க செயலாளர் முகம்மது, பொருளாளர் ஹரிஷ், கோவை ராயல் அரிமா சங்க தலைவர் சுரேஷ் குமார், செயலாளர்கள் விஜயராகவன், சின்ன துரை, பொருளாளர் கார்த்திக், காளப்பட்டி சிறகுகள் அரிமா சங்க தலைவர் திவாகர், செயலாளர்கள் குணசேகரன், மதன்குமார், பொருளாளர் சம்பத், மாவட்ட தலைவர் காளி யப்பன், சூரிய நந்த கோபால், நாராயண சாமி, தன சேகரன், சச்சின் தாமஸ், முத்துவேல், ஆனந்தகுமாரி , கோபா லகிருஷ்ணன், நடராஜ் வட்டாரத் தலைவர் கனக ராஜ், சங்கமுன்னாள் தலைவர்கள் சுகுமார், நந்தகுமார், லோகநாதன், ஜெகதீஷ், சின்ராஜ், சுப்ரமணியம், முத்துக் குமாரசாமி, மோகன்ராஜ், வெங்கடேஷ் கிருஷ்ண மூர்த்தி சக்திவேல் ரங்க ராஜ், ராஜேஸ்வரி, பிரேமலதா, சுப்பு செந்தில் குமார், தேஜஸ்வினி, ரேவதி, மரகதம், அஸ் வினி, சத்யபாமா மற் றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img