fbpx
Homeபிற செய்திகள்நோபள் உலக சாதனை படைத்த ஆர்ஜே பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

நோபள் உலக சாதனை படைத்த ஆர்ஜே பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

கோவை நீலாம்பூர் பகுதியில், உள்ள டிகத்லான் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில், கடந்த 20ம் தேதி அன்று, டிகத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா, மற்றும் வீரவர்மன் வீர சிலம்பாட்ட பயிற்சி பள்ளி, இணைந்து நடத்திய நோபள் உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 13 வகையான, போர் சிலம்பமுறைகளில் போட்டிகள் நடைபெற்றது, திருப்பூர், மற்றும் கோவையை சார்ந்த 5 வயது முதல், 10 வயது வரையிலான குழந்தைகள், 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோவை விளாங் றிச்சி பகுதியில் உள்ள ஆர்ஜே மெட்ரி குலேஷன் பள்ளி மாணவர்களான, ஆர்.பி.ரோஹித் ராஜ், ஆர்.பி.ரோஹன் ராஜ், ஒற்றை கையால் ஒற்றை வாள் சுற்றி சாதனை படைத்தார் மற்றும் இனியன் படுத்த நிலையில் ஸ்டார் முறையில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார் மூன்று மாணவர்களும் இந்த பயிற்சியை, சுமார் 7 மணி நேரம், நிற்காமல் சுற்றி, நோபள் உலக சாதனை படைத்தனர்.

இந்த மாணவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் நேற்று பள்ளியில் நடைபெற்ற இறை வணக்க நிகழ்ச்சியில், உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை செயளாளர் ஏ.அணில் குமார், பள்ளியின் முதல்வர் என் நிர்மலா, துணை முதல்வர், பொன்மணி ஜெபதாய், நிர்வாக இயக்குநர், பிரசாத், மற்றும் சிலம்ப ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமையில், மாணவர்களுக்கு பெற்றோர்கள் ராஜா, பிரியா, மற்றும் சங்கர் கணேஷ், குமாரி லக்ஷ்மி முன்னிலையில் பாராட்டுசான்றிதழ் வழங்கபட்டது.

அவர்களுக்கு ஊக்க தொகை அளிக்க பட்டது. மேலும் வாள் சுற்றி சாதனை படைத்த மாணவர்களுக்கு, பள்ளியின் சார்பாக, வீர வாள் பரிசாக வழங்கபட்டது, இதனை அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கைகளை தட்டி உற்சாக படுத்தினர் என்பது குறிப் பிடத்தக்கது

படிக்க வேண்டும்

spot_img