fbpx
Homeபிற செய்திகள்பசுமை மாறாமல் நுகர்வோருக்கு காய்கறி, பழங்கள்: கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சி பகுதியில் புதிய திட்டம்...

பசுமை மாறாமல் நுகர்வோருக்கு காய்கறி, பழங்கள்: கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சி பகுதியில் புதிய திட்டம் மார்ச் 5-ம் தேதிக்குள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, சென்னை ஆகிய 5 மாநகராட்சிப் பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம், விவச£யிகளின் தோட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை, பசுமை மாறாமல் நுகர்வோருக்கு வீடு தோறும் வழங்கிட ஏதுவாக பண்ணையில் இருந்து வீட்டுக்கு (Farm to Home) என்ற புதிய திட்டத்தை அரசு விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக அரசு விவசாயிகள் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக மட்டும் இல்லாமல் தங்கள் விளை பொருட்களை இடைதரகர்களின்றி நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உழவர்சந்தை திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப் புடன் செயல்படுத்தி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காலங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய் கறி மற்றும் பழங்களை நேரடியாக வீட்டிற்கே விற்பனை செய்த முயற்சி நுகர்வோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது

இதன் அடுத்த கட்ட மாக இச்சேவையை விரி வுப்படுத்த சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடி யாகும் காய்கறிகள் மற் றும் பழங்களை பசுமை மாறாமல் நுகர்வோருக்கு வீடு தோறும் வழங்கிட ஏதுவாக (Farm to Home) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தில் கிரா மப்புற விவசாய இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு நடமாடும் வாகனங்கள் வாங்குவதற்காக 40 சத வீதம் மானியம் அல்லது ரூ.2 இலட்சம் நிதி உதவி அரசு மூலம் வழங்கப்படும்.

கோவை மாநகராட்சிக ளில் 6 நடமாடும் வாக னங்கள் மூலம் 100 வார் டுகளுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் வாகனங்கள் மூலம் விற் பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கு விற்பனை விலை அரு கிலுள்ள உழவர்சந்தை விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் வாகனங்கள் வாங்குவதற்கான மானியம் பெற பயனாளிகள் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு மூலம் தெரிவு செய்யப்படும்.
இத்திட்டம் மூலம் நடமாடும் வாகனங்களுக் கான மானியம் பெற வரையறுக்கப்பட்ட தகு திகள்: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்.

21 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம்விவசாயிகள். சொந்த/குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நில உடமை சான்று, சிட்டா, அடங் கல், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்க வேண்டும்.

பயனாளிகளுக்கு ஒரு வாகனத்திற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
இத்தகைய தகுதியு டைய ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை மாவட்ட வேளாண்மை துணை இயக்கு நர்(வேளாண் வணிகம்) திருச்சி சாலை, இராமநா தபுரம், கோயம் புத்தூர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து, வரும் மார்ச் 5-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை, அந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கோயம்புத்தூர் (கைப்பேசி எண்: 9865678453 email id -ddab.coimbatore2@gmail.com) மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img