fbpx
Homeபிற செய்திகள்பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மெகா கிளீன் இந்தியா 2.0

பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மெகா கிளீன் இந்தியா 2.0

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு
எதிராக மெகா கிளீன் இந்தியா 2.0 என்ற நிகழ்ச்சி கோவையில் நடந்தது.

ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரியின் என்.எஸ்.எஸ். அமைப்பு, சென்னை என்.எஸ்.எஸ். மண்டல இயக்குநரகம், மத்திய தகவல் தொடர்பு, பத்திரிகை தகவல் பீரோ சென்னை, கோவை பாரதியார் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். அமைப்பு ஆகியன இணைந்து இந்த மெகா கிளீன் இந்தியா 2.0 பிரச்சாரத்தை நடத்தின.

மெகா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இது, கலாமின் உலக சாதனைப் பதிவில் பதியப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் என்.எஸ்.எஸ். மண்டல இயக்குநர் டாக்டர் சி.சாமுவேல் செல் லையா, கலாமின் உலக சாதனைப் பதிவு சான்றிதழை வழங்கினார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட் டளை சிஇஓ ராம்குமார், கல்லூரி முதல்வர் டாக்டர் பி.எல்.சிவக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மாநில என்.எஸ்.எஸ். அதிகாரி டாக்டர் எம்.செந்தில்குமார், பாரதியார் பல்கலை

என்.எஸ்.எஸ்.திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர்.அண்ணாதுரை உள் ளிட்டோர் உடன் இருந்தனர்.

உறுதிமொழி ஏற்பைத் தொடர்ந்து நவ இந்தியா பகுதியில் துப்புரவுப் பணிகளில் மாண வர்கள் ஈடுபட்டனர்.என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் டாக்டர் எஸ்.பிரகதீஸ்வரன், ஆர்.நாகராஜ், ஏ.சுபாஷினி, ஜெ.தீபக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img