fbpx
Homeதலையங்கம்புதிதாக பொறுப்பேற்கும் தமிழக அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்

புதிதாக பொறுப்பேற்கும் தமிழக அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்

தமிழகத்தில் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது என்பது அடுத்து பொறுப்பேற்க உள்ள அரசிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும், பெரும் நிதிச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதில் ஐயமில்லை.

பொதுமுடக்கம் இல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முயலும்போது பொதுமக்களுக்குத் தேவையான நிதி உதவியை உடனடியாக வழங்க அரசு கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். அரசிற்கான வருவாய் என்பது அதிகரிக்க வாய்ப்பில்லாத நிலையில், அடுத்து பொறுப்பு ஏற்க இருக்கும் அரசுக்கு செலவுகளே அதிகமிருக்கும்.

கொரோனா நெருக்கடியால் அரசிற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.
ஆட்சி அமைக்கப்போவது அதிமுகவாக இருந்தாலும் திமுகவாவது இருந்தாலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மொத்த மாநில உற்பத்தியில் நான்கு அல்லது ஐந்து விழுக்காட்டை கூடுதலாக செலவிட வேண்டி இருக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பு.

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை அமல்படுத்த வரிவருவாயை செலவிடுதல் அவசியம்.
திருவள்ளுவர் கூற்றுப்படி, பொருள் வரும் முறையான வழிகளை உருவாக்குதலும், அதன் மூலம் வருவாயைப் பெருக்குவதோடு, அதனைக் காத்து மக்களுக்குப் பயன்தரும் வகையில் செலவிடுவதும் நல் அரசின் கடமை.

இதை அடுத்து பொறுப்பேற்கும் அரசு உணர்ந்து செயல்படுதல் அவசியம்.

படிக்க வேண்டும்

spot_img