fbpx
Homeதலையங்கம்புதிய அச்சம்

புதிய அச்சம்

கொரோனா 2வது அலைக்கு இதுவரை பலர் உயிர் இழந்து விட்டனர். சடலங்களை எரியூட்ட சுடுகாடு கிடைக்காததால் காலி இடங்கள் எல்லாம் சுடுகாடாக மாற்றப்பட்டது.

வடமாநிலங்களில் கொரோனா கோர முகத்தை கண்டு மக்கள் நடு நடுங்குகின்றனர். தென் மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் முழு ஊரடங்கு தான் இதற்கு தீர்வு என்று அரசியல் தலைவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் அறிவிப்பு வெளியாகி உள்ளது பாராட்டத்தக்கது.

கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஓரளவுக்கு கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவி செய்தாலும் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் திணறி வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்கையில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து போவது அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இளம் வயதினருக்கு இதுகுறித்த எந்த அறிகுறிகளும் காணப்படாமல் உள்ளது. இவர்கள் வழக்கம் போல் மகிழ்ச்சியாகவே தங்கள் பணிகளை செய்கின்றனர். நன்றாக விளையாடுகின்றனர்.

ஆனால் உள்ளுக்குள்ளேயே சத்தம் இன்றி இந்த தொற்று படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வியாதிக்கு ஹேப்பி ஹைப்போக்சியா என்று பெயரிட்டுள்ளனர்.

ஹைப்போக்சியா என்றால் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைதல் ஆகும். ஆனால் இளம் வயதினருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதே தெரியாமல் நன்றாக இருப்பார்கள்.

எனவே இதை ஹேப்பி ஹைப்போக்சியா என்கின்றனர். இதனால் சுவாச கோளாறு அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. மிக நெருக்கடியான நிலை ஏற்படும் போது நுரையீரல்கள் பாதிக்கப்படும். வியாதியின் வளர்ச்சியும் தீவிரமடையும்.

இதனால் உடனடியாக ஆக்சிஜன் இணைப்பு அவர்களுக்கு தேவைப்படும். சில நபர்களுக்கு வென்டிலேட்டர்களும் தேவையாக இருக்கும்.

நாட்டில் 2 வது கொரோனா அலையின் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து உள்ள சூழலில் அறிகுறியே இல்லாமல் இதுபோன்ற துணை வியாதிகளும் ஏற்படுவது, குறிப்பிடும்படியாக இளம் வயதினரிடம் புதுசா என்ன வியாதி தொற்றியுள்ளதோ என்ற பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img