fbpx
Homeபிற செய்திகள்‘புதுமைப் பெண்’ திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் 2 மாதங்களில் 5,389 பேருக்கு ரூ.95.45 லட்சம் உதவித்...

‘புதுமைப் பெண்’ திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் 2 மாதங்களில் 5,389 பேருக்கு ரூ.95.45 லட்சம் உதவித் தொகை

தருமபுரி மாவட்டத்தில் மட்டும், கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில், மொத்தம் ரூ.95,45,000/- மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் – ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று 5,389 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் கடந்த 5.9.2022 அன்று நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

2,500 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம்‌ மற்றும்‌ நிதிக்கல்வி புத்தகம்‌ அடங்கிய ‘புதுமைப்‌ பெண்’ பெட்டகப்பை,‌ வங்கி பற்று அட்டை ஆகியவையும் வழங்கப்பட்டன.

தன்னிறைவு
கல்வி என்னும்‌ நிரந்தர சொத்தினை பெண்கள்‌ அனைவரும்‌ பெற்றிட வேண்டும்‌ என்ற பெண்ணுரிமை கொள்கையின்‌ மறு உருவமாகவும்‌, பெண்‌ சமுதாயத்தின்‌ வாழ்வில்‌ ஒளியேற்றி வலிமையான பொருளாதாரத்தில்‌ தன்னிறைவு அடையவும்‌ இப்புதுமைப்‌ பெண்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படுகிறது.

பெண் கல்வியை போற்றும்‌ விதமாகவும்‌, உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண்‌ சமூகம்‌ நாளைய தமிழகத்தை தாங்கும்‌ அறிவியல்‌ வல்லுநர்களாகவும்‌, மருத்து வராகவும்‌, பொறியாளராகவும்‌, படைப்பாளராகவும்‌, நல்ல குடிமக்களை பேணும்‌ உயர்கல்வி கற்ற பெண்களாகவும்‌, கல்வியறிவு, தொழில்நுட்பம்‌ நிறைந்த உழைக்கும்‌ சமூகத்தை சார்ந்தவராகவும்‌, உருவாக அடித்தளமாக ‘புதுமைப்‌ பெண்’” என்னும்‌ உன்னத திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

யாருக்கு பொருந்தும்
இப்புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறும்‌ மாணவிகள்‌ 6 முதல் 12-ம் வகுப்பு வரை, தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து இருக்க வேண்டும். மாணவிகள் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து, விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண்: 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெறலாம்.
கல்லூரியில் பயிலும் மாணவிகள் இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைய தளம் லீttஜீ://ஜீமீஸீளீணீறீஸ்வீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

‘புதுமைப்‌ பெண்’‌ திட்டத்தில்‌, சான்றிதழ்‌ படிப்பு, இளங்கலைப்‌ பட்டம்‌, தொழில் சார்ந்த படிப்பு மற்றும்‌ பாரா மெடிக்கல்‌ படிப்பு போன்ற படிப்புகளை பயிலும்‌ மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்‌.

தகுதியுடைய மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் முதல் பட்டப்படிப்பினை முடிக்கும்வரை மாதந்தோறும் மாணவிகளின் வங்கிக்கணக்கில்ரூ.1000/- நேரடியாக பற்று வைக்கப்படும்.

இவர்களுக்கும்
முதலாம்‌ ஆண்டிலிருந்து இரண்டாம்‌ ஆண்டு செல்லும்‌ மாணவியரும்‌, இரண்டாம்‌ ஆண்டிலிருந்து மூன்றாம்‌ ஆண்டு செல்லும்‌ இளங்கலை பட்டப்படிப்பு பயிலும்‌ மாணவி‌களும்‌, தொழிற்கல்வியைப்‌ பொறுத்தமட்டில்‌, மூன்றாம்‌ ஆண்டிலிருந்து நான்காம்‌ ஆண்டிற்குச்‌ செல்லும்‌ மாணவிகளுக்கும்‌, மருத்துவக்‌ கல்வியைப்‌ பொறுத்தமட்டில்‌, நான்காம்‌ ஆண்டிலிருந்து ஐந்தாம்‌ ஆண்டு செல்லும்‌ மாணவிகளும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனடையலாம்‌.

தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் கடந்த 5.9.2022 அன்று நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, பெட்டகப்பை, மாதம் ரூ.1000/- வங்கி கணக்கில் வழங்கினார்.

தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 2022 ஆகஸ்ட்டில் 4156 மாணவிகளுக்கு தலா ரூ.1000/- வீதம் ரூ.41,56,000/-மும், 2022 செப்டம்பரில் 5,389 மாணவியர்களுக்கு தலா ரூ.1000/- வீதம் ரூ.53,89,000/-மும் என மொத்தம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2 மாதங்களில் மட்டும் தருமபரி மாவட்டத்தில் மொத்தம் ரூ.95,45,000/- (ரூ.95.45 இலட்சம்) ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று 5,389 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

சிறந்த கல்வி கற்பேன்
நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் டி.காணிகரள்ளி கிராமத்தைச் சேர்ந்த தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை தமிழ் பட்டபடிப்பில் 2-ம் ஆண்டு பயின்று வரும் மாணவி வ.ஜஸ்வர்யா தெரிவித்ததாவது:

தந்தை மு.வடிவேல். தாயார் வ.செல்வி. விவசாயம் செய்து வருகிறார். திருமணமான மூத்த சகோதரி உள்ளார். ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் மாதம் ரூ.1000/- வங்கி கணக்கிற்கு வருகிறது.

உயர்கல்வி கற்பதற்கும், போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்திக் கொள்வதற்கும், புத்தகங்கள் வாங்குவது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டு சிறந்த கல்வியைக் கற்று உயர்ந்த இடத்தை நிச்சயம் அடைவேன். மாணவிகளின் சார்பாக முதல்வருக்கு நன்றி என்றார்.

ஒளி பிறந்தது
தருமபுரி வட்டம், கொங்காரப் பட்டி, வேப்பமரத்தூரைச் சேர்ந்த தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை தமிழ் பட்டபடிப்பில் 3-ம் ஆண்டு மாணவி பி.இந்துமதி தெரிவித்ததாவது:

தந்தை எம்.பசுவன், தாயார் பி.திலகம். இருவரும் விவசாயம் செய்கின்றனர். இரு அண்ணன்கள். நன்றாக படித்து, வேலையில் சேர்ந்து உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதே இலட்சிமாக இருக்கிறது. இந்நிலையில் ‘புதுமைப் பெண்’ திட்டம் அறிந்து விண்ணப்பித்தேன்.

மாதம் ரூ.1000/- வங்கி கணக்கிற்கு வருகிறது.
இந்த தொகையை கொண்டு உயர்கல்வி கற்று, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்திக்கொண்டு, உயர்ந்த இடத்தை நிச்சயம் அடைவேன். வாழ்வில் ஒளியேற்றிய முதல்வருக்கு நன்றி என்றார்.

படிக்கும் பெண்கள் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்பதற்காகவும், உயர்கல்வி பயில நிதி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்திலும் மாதம் ரூ.1000/- உதவித்தொகையினை வழங்கி தைரியத்தையும், தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்தியுள்ள முதல்வருக்கு தருமபுரி மாவட்டத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் பயனடைந்த மாணவிகள் என்றென்றும் நன்றிக் கடன் உள்ளவர்களாக இருப்பார்கள்.

கஷ்டம் நீங்கியது
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், மானியதஅள்ளி கடத்திக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பட்டபடிப்பில் 3-ம் ஆண்டு மாணவி சி.ஜீவா தெரிவித்ததாவது:

தந்தை சின்னசாமி, கட்டடத் தொழிலாளி. தாயார் காந்தி, விவசாயக் கூலி வேலை செய்கிறார். அண்ணன் உண்டு. தேவையான புத்தகங்கள் குறிப்பேடுகள் போன்றவற்றை வாங்குவதற்கும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ள புத்தகங்களை வாங்குவதற்கும், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கும் பணம் கேட்க கஷ்டமாக இருக்கும்.

தற்போது இக்கஷ்டம் ‘புதுமைப் பெண்’ என்ற திட்டத்தால் நீங்கியது.மாதம் ரூ.1000/- வங்கி கணக்கிற்கு வருகிறது. தன்னம்பிக்கையினை ஏற்படுத்தி தந்துள்ள முதல்வருக்கு கோடான கோடி நன்றி என்றார்.

தொகுப்பு:
மு. அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தருமபுரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img