fbpx
Homeபிற செய்திகள்புதுமையான தொழில்நுட்பங்கள் குறித்த 3 நாள் மாநாடு: சிதம்பரத்தில் துவக்கம்

புதுமையான தொழில்நுட்பங்கள் குறித்த 3 நாள் மாநாடு: சிதம்பரத்தில் துவக்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உள்தரக் காப்பீட்டுக் கழகம் (மினிகிசி) ஏற்பாடு செய்துள்ள புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் உயர்கல்வியில் அவற்றின் பயன்பாடுகள் குறித்த 3 நாள் சர்வதேச மாநாடு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நேற்று (அக்.17) துவங்கியது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முதுமுனைவர் ஆர்.எம். கதிரேசன், மாநாட்டை துவக்கி வைத்து பேசும்போது, தகவல் தொழில்நுட்ப சகாப்தத்தில் புதுமையான தொழில் நுட்பங்களின் பயன்பாடு தவிர்க்க முடியாதது.

எவ்வாறாயினும், கல்வியின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு, திறன் உட்பொதிக்கப்பட்டதாகவும் மாற்றுவதற்கு, உள்நாட்டு அறிவு அமைப்புகளுடன் இணைந்த தொழில் நுட் பங்களின் சரியான பயன்பாடு அவசியம் என்று குறிப் பிட்டார்.

அமெரிக்கா, டேட்டா இன்ஜினியரிங், கூகுள் பொறியியல் மேலாளர் ஹரி ரகுபதி பேசும்போது, கவர்னன்ஸ் மற்றும் சைபர் பாதுகாப்புக் கருத்துகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய நுண்ணறிவின் அவசியத்தையும், இளைஞர்களின் வருங்காலத்தை வளமாக்க இந்த நுண்ணறிவுகளில் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷனின் முன்னாள் முதன்மை தரவு விஞ்ஞானி மற்றும் சிஇஓ பிரபா சந்தானகிருஷ்ணன் பேசுகையில், உயர்கல்விக்கான புதுமையான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருத்துகளின் பயன்பாடு பற்றிய முக்கியத்துவத்தை விவரித் தார். மாநாடு உயர்கல்வியின் ஆறு முக்கிய களப் பகுதிகளில் புதுமையான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதைக் கையாள்கிறது.

மாநாட்டில், நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பேராசிரியர் எஸ்.அறி வுடைநம்பி, இயக்குநர், IQAC, டாக்டர் எஸ்.ரமேஷ் குமார், துணை இயக்குநர், IQAC ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img