fbpx
Homeபிற செய்திகள்புற்றுநோய் மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை- முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

புற்றுநோய் மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை- முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

மாநிலம் முழுவதும் உள்ள புற்றுநோய் மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நட வடிக்கை எடுத்து வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ரேலா நிறுவன புற்றுநோய் மையத்தில் இந்தியாவின் முழுமையான, அனைத்து வசதி களும் ஒரே கூரையின் கீழ் அமைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை (ஆர்.ஐ.சி.சி) குரோம் பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

புதிய ஆர்.ஐ.சி.சி. மையத்தைத் திறந்துவைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: ‘இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என்கிற பெருமையைப் பெற்றுள்ள சென்னையில், புதிய புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றுமொரு சிறப்பு அடையாளமாகத் திகழும். இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சர்வதேச, உள்நாட்டு நோயாளிகளில் 40 சதவீதத்துக்கு மேற்பட்டோர் சென்னைக்கு வருகிறார்கள்.

நாட்டில் புற்றுநோய் வேகமாக அதிகரித்துவருவது கவலையளிக்கிறது. அது மட்டுமல்லாமல் புற்றுநோய் தாமதமாகக் கண்டறியப்படுவது பிரச்சினையை மோசமாக்குகிறது. தற்போதுள்ள நிலையில், மொத்த புற்று நோயாளிகளில் மூன்றில் ஒரு வருக்கே முதல், இரண்டாம் நிலைகளில் புற்றுநோய் கண்ட றியப்படுகிறது.

அதற்குப் பிந்தைய நிலைகளில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிப்பது கடி னம், சிக்கலானதும்கூட. இதன் காரணமாக முதல், இரண்டாம் நிலைகளிலேயே மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோயாளிகளைக் கண்டறிய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்மூலம் சிகிச்சை வசதிகள் மேம்படும் என்று நம்புகிறோம். மாநிலம் முழுவதும் உள்ள புற்றுநோய் மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நட வடிக்கை எடுத்துவருகிறோம். தமிழ்நாடு அரசின் முன்னேற்ற நோக்கத்துக்கு உதவும் வகையில் ஆர்.ஐ.சி.சி. மையம் அமையும், என்றார்.

டாக்டர் ரேலா நிறுவன மருத்துவ மையத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா கூறுகையில், சென்னையில் கிடைத்துவரும் புற்றுநோய் சிகிச்சையில் தேவைப்படும் மாற்றத்தை இந்த புற்றுநோய் மையம் நிகழ்த்தும்.

உலகின் மிகவும் அதிநவீன மருத்துவ, அறுவைசிகிச்சைத் தொழில் நுட்பங்களை தமிழ்நாட்டு மக்களுக்கும், நாட்டின் மற்ற மாநில மக்களுக்கும் கிடைக்க இந்த மருத்துவ மையம் வழிவகுத்துள்ளது.

முதல்வரின் நோக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் ஆர். ஐ.சி.சி. ஏற்கெனவே செயல் பட்டுவருகிறது. தொடர்ந்து அதே வகையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் புற்றுநோய் சிகிச்சையை வழங்குவோம்.

முதல்வரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்களுடைய பொறுப்பை வெளிப்படுத்தும் வகையில் இந் தக் குழந்தைகள் திகழ்வார்கள் என்றார்.ஆர்.ஐ.சி.சி.யில் PET-CT,, டிஜிட்டல் மாமோ கிராம் உள்ளிட்ட நவீன மருத்துவக் கருவிகள் உள்ளன.

புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கீமோதெரபி, இம்யூனோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளின் மூலம் புற்றுநோயை உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெற்று போராடும் வகையில் பல்வேறு சிகிச்சைகளை வழங்கும் நோக்கத்துடன் அது செயலாற்றி வருகிறது.

ஆர்.ஐ.சி.சி.யை திறந்து வைத்த பின், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இங்கு சிகிச்சை பெற்ற குழந்தைகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார்.

படிக்க வேண்டும்

spot_img