fbpx
Homeபிற செய்திகள்பூச்சி நோயை கட்டுப்படுத்தி, மாங்காய்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில்...

பூச்சி நோயை கட்டுப்படுத்தி, மாங்காய்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு மனு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பூவில் ஏற்படும் பூச்சி நோயை கட்டுப்படுத்தி, மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்க உறுதி செய்ய கோரி மா விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மா விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவர் சவுந்திரராஜன், கிருஷ்ணகிரி அணை இடதுபுறக்கால்வாய் நீட்டிப்பு சங்கத்தின் தலைவர் சிவகுரு ஆகியோர் தலை¬ மயில் விவசாயிகள் செந்தில், கிருஷ்ணன், செல்வம், கேசவன், பொற்கோவன், ராமமூர்த்தி, லட்சுமணன், கணேஷ் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பூச்சிகளால் தாக்கப்பட்ட மாம் பூக்கள், இலைகளுடன் டிஆர்ஓ ராஜேஸ்வரியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: 5 ஆண்டுகளாக மா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளாகிய நாங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். மழையின்மையால் வறட்சி, மாமரங்கள் காய்ந்து போனது.

இதனைத்தொடர்ந்து கொரோனா ஊரடங்கு, பூச்சித் தாக்குதல் உள்ளிட் டவையால் பெரிய அள வில் இழப்பினை சந் தித்து வருகிறோம்.

மா சாகுபடியை கொண்டே எங்களது குழந் தைகளின் கல்வி, திருமணம் உள்ளிட் டவை மேற்கொள்ள முடி யும். ஆனால், தொடர் இழப்பு களால் வங்கிகள், தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் தவித்து வருகி றோம்.

குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக பூச்சி தாக்குதல் காரணமாக மா மகசூல் வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய வகையான பூச்சித் தாக்குதலை கட்டுப்ப டுத்த முடியாமல் மா விவசாயிகளான நாங்கள் நிலைகுலைந்துள்ளோம்.

மாவை பொறுத்தவரை பூச்சி தாக்குதல், பூக்களில் தொடங்கி காய்கள், பழங் களை பாதிக்கும் நிலை தான் இருந்தது. ஆனால், தற்போது பூக்களை தாக்கியுள்ள தத்து பூச்சிகள், மா இலைகளையும் விட்டு வைக்கவில்லை. இதனை கட்டுப்படுத்த மருந்துகள் தெளித்தும் கட்டுக்குள் வரவில்லை.

மா பருவக்காலம் தொடங் கும் போது தொடர்புடைய தோட்டக்கலைத்துறை, வேள £ண்மைத்துறை அலுவ லர்கள் ஒன்றிணைந்து விவசாயிகளுக்கு உரிய ஆலே £சனைகள், பயிற்சி வழங்க வேண்டும் என ஏற்கனவே முத்தரப்பு கூட்டத்தில் மா விவசாயிகள் அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதே நிலை நீடித்தால் எதிர்வரும் ஆண்டுகளில் மா விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தியும், மாங்காய்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யவும், மாவட்ட கலெக் டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2021ம் ஆண்டு இழப்பினை சந்தித்த மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர் கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img