பெண்களின் உடலில் ‘டாட்டூ’ வரையும் ஆபாச வீடியோக்கள் தமிழகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் குவிந்து கிடக்கும் இந்த ஆபாச காட்சிகளை முழுவதுமாக அழிக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்பு கின்றனர்.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உடலில் ‘டாட்டூ’ வரையும் கலாச்சாரம் தீவிரமாக பரவி வருகிறது. உடலில் பச்சை குத்துவதைத்தான் தற்போது ஆங்கிலத்தில் ஸ்டைலாக ‘டாட்டூ’ என்று அழைக்கின்றனர். இந்த டாட்டூக்களை இளம்பெண்கள் பலர் தங்களது உடலில் வரைந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுபோன்று ‘டாட்டூ’ வரையும் ஆண் கலைஞரிடம் தங்கள் உடலில் எந்த பகுதியையும் காட்டி டாட்டூ வரையச் சொல்ல, இளம்பெண்கள் பலர் தயங்குவது இல்லை. குறிப்பாக இளம்பெண்களின் நெஞ்சு பகுதி, தொடை உள்ளிட்ட இடங்களில் ‘டாட்டூ’ வரைவது போன்று ஆபாச வீடியோக்கள் இணைய தளத்தில் அதிக அளவு காணப்பட்டது. இந்த வீடியோக்களை போலீசார் நீக்கி உள்ளனர்.
துணை நடிகை ஒருவர் கவர்ச்சி உடையில் ‘டாட்டூ’ வரைவதற்காக ஒரு மெத்தையில் படுத்து இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் பரவி இருந்தது. மாடலிங் பெண் ஒருவர் குட்டைப் பாவாடை அணிந்து வந்து சிரித்தபடி தனது காலில் ‘டாட்டூ’ வரையச் சொல் வதும் ஆபாசத்தின் உச்சமாக உள்ளது. இதுபோன்ற வீடியோக்களையும் சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றி அழித்துள்ளனர்.
இப்படி ஏராளமான ‘டாட்டூ’ வீடியோக்களை இணைய தளங்களில் இருந்து போலீசார் அகற்றி உள்ளனர்.
சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் தற்போது அதிகரித்துள்ளது. இதையறிந்து சைபர் கிரைம் பிரிவை மேலும் வலுப்படுத்த சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் பணியாளர்களை சைபர் கிரைம் போலீசில் அமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. போலீசார் இவ்விஷயத்தில் இன்னும் தீவிரம் காட்டி டாட்டூவிற்கு முடிவு கட்ட வேண்டும்.