fbpx
Homeதலையங்கம்மடைமாற்றம் செய்வது தாய்-தந்தையின் பொறுப்பு!

மடைமாற்றம் செய்வது தாய்-தந்தையின் பொறுப்பு!

வீட்டை விட்டு வெளியே போனால்தான் கிரிமினல்களால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதில்லை. நவீன தொழில்நுட்பத்தின் தயவால் வீட்டிற்குள் இருக்கும் பெண்களுக்கு கூட எளிதில் வலைவீசி விட முடியும். இளம்பெண்கள் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் கயவர்களின் பிடியில் சிக்கி அவதிப்பட வேண்டியது தான்.
வீட்டிற்குள் இருந்து படித்துக்கொண்டிருக்கும் பெண்ணிற்கு என்ன தீங்கு வந்து விடப்போகிறது என்று பெற்றோர்கள் இனியும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என்பதையே சமீபத்திய பாலியல் சீண்டல் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
நம் குழந்தைகள் பாடத்தைத்தான் படிக்கிறார்களா? வீடியோ கேம் விளையாடுகிறார்களா?-என்பதை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இளங்கன்று பயமறியாது தானே?-சமூகத்தில் நடக்கும் நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்வது, பிள்ளைகளின் கவனத்தை நல்ல திசைகளில் மடைமாற்றம் செய்வது தாய-&தந்தையின் பொறுப்பு.
கொரோனா நோய்த் தொற்று பரவியதால் கடந்த ஓராண்டிற்கும் மேலாக வெளியுலகத்தையே பார்க்க முடியாத நிலையில் இருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு நல் ஆசிரியராய், உற்ற தோழனாய், பாசத்திற்குரிய சகோதரர்களாய், நேசத்துக்குரிய உறவினராய் இருக்க வேண்டியது பெற்றோரின் அத்தியாவசியக்கடமையும் கூட.
எனவே பிள்ளைகளின் கவனத்தை நல்ல திசையில் மடைமாற்றம் செய்வது தாய்&தந்தையரின் பொறுப்பாகும்.

படிக்க வேண்டும்

spot_img