fbpx
Homeபிற செய்திகள்மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சாம்பியன்

மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சாம்பியன்

மண்டல அளவிலான டிவென்டி-20 கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த அணிகளுக்கு இடையிலான ‘ஏ’ மண்டல டிவென்டி-20 கிரிக்கெட் போட்டி, பாரதியார் பல்கலைக் கழகம் சார்பில், பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் கடந்த 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதன் இறுதிப் போட்டிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், சி.எம்.எஸ்.அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி அணியும் தகுதி பெற்றன.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு, 226 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய விஜய் அபிமன்யு 55 பந்துகளில் 110 ரன்களும், ஸ்ரீராம் ஈஸ்வர் 43 பந்துகளில் 74 ரன்களும் விளாசினர்.

227 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய சி.எம்.எஸ். அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி அணி வீரர் சுஷில் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பாரதியார் பல்கலைக் கழக ‘ஏ’ மண்டல டிவென்டி-20 கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் பட்டத்தை, ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவி யல் கல்லூரி அணி கைப்பற்றியது.

சாம்பியன் பட்டம் வென்ற அணியினரை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் முனைவர் கே.வடிவேலு ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img