fbpx
Homeபிற செய்திகள்மண்ணை வளமாக்கும் புதிய கருவி ‘ஜிவா’

மண்ணை வளமாக்கும் புதிய கருவி ‘ஜிவா’

தூய்மையான தண்ணீருக்கு உத்தரவாத மிக்க தீர்வுகளை வழங்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான போர்த் பேஸ் வாட்டர் டெக்னாலஜிஸ் நிறுவனம்(4th Phase Water Technologies Pvt. Ltd,) கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் பண்ணைகளில் தண்ணீருக்கு புத்துணர்வு அளிக்கும் ‘ஜிவா’ என்னும் கருவியை பொருத்தி உள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனரும் உலகப் புகழ்பெற்ற இந்திய நீர் மேலாண்மை விஞ்ஞானியுமான டாக்டர் கிருஷ்ணா மாதப்பா கூறுகையில், தூய்மையான மற்றும் ஆற்றல்மிக்க தண்ணீருக்காக ‘ஜிவா’ என்னும் புதிய கருவியை உருவாக்கி உள்ளோம்.

இந்த கருவி வழியாக செல்லும் சாதாரண தண்ணீர் மூன்று படி நிலைகளில் தண்ணீரை ஆற்றல்மிக்கதாக மாற்றும் செயல்முறையை மேற்கொள்கிறது. அது தண்ணீரில் இருக்கும் எந்த அழுத் தத் தையும் குறைத்து ஆற்றல் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

தண்ணீரை அதன் இயற்கையான மற்றும் ஊட்டச்சத்து நிலைக்கு மாற் றுகிறது என்றார். இந்நிறுவன இயக்குனர் வி. சீனிவாசன் கூறியதாவது:மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மற்றும் கோவை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பலர், பாசனத் திற்குப் பயன்படுத்தப்படும் நீர் மிகவும் மாசுபட்டதாகவும், மோசம £னதாகவும், தரமற்றதாகவும் இருப்பதாகக் கூறினர்.

இந்த நிலையில் ‘ஜிவா’ கருவி குறித்து எடுத்துக் கூறினோம்.
இதில் 25 விவசாயிகள் தற்போது ‘விபாசா’ என்னும் கருவியை தங்களது விவசாய பம்ப்புகளில் பொருத்தி உள்ளனர். விவசாயிகளின் ஆரம்ப நிலை கருத்து மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது.

இதில் அவர்கள் தண்ணீரின் கடினத்தன்மை குறைந்துள்ளதாகவும், தண்ணீர் ஆற்றல் மிக்கதாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

‘ஜிவா’ கருவி 4 மாடல்களில் வீடுகளில் பயன்படுத்தும் வகையிலும், விவசாய நிலங்களில் பயன்படுத்தும் வகையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் விலை அவரவர்களின் பயன்பாட்டைப் பொறுத்து 8,500 ரூபாய் முதல் 1,15,000 ரூபாய் வரை இருக்கும். இதை வீடுகள், வயல்கள், கால்நடை, கோழிப் பண்ணைகளில் உள்ள தண்ணீர் குழாய் களில் பொருத்தலாம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img