fbpx
Homeபிற செய்திகள்மாநிலக் கல்விக் கொள்கை 29-ல் கருத்துக் கேட்பு கூட்டம்

மாநிலக் கல்விக் கொள்கை 29-ல் கருத்துக் கேட்பு கூட்டம்

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையில் இடம் பெற வேண்டியவை குறித்து வரும் 29-ம் தேதி கோவை மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநிலத்திற்கான தனித்துவமான மாநிலக் கல்வி கொள்கை வகுப்பதற்காக புதுதில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் த.முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இக்குழு கோவை மண்டல அளவில் கருத்துக் கேட்பு கூட்டத்தினை வரும் 29-ம் தேதி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடத்த உள்ளது.

தமிழ்நாடு மாநிலக்கல்விக் கொள்கையில் இடம் பெற வேண்டியவை குறித்து கோவை மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற் றோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது எழுத்துப்பூர்வமான கருத்துகளை தெரிவிக்க விரும்பின் வரும் 27-ம் தேதி காலை 10 மணிமுதல் 1 மணி வரை பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி அல்லது கோ.து.வ.ச. அரசு (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, ராஜ வீதி , கோவை பள்ளிகளில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

இத்தகவலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img