fbpx
Homeபிற செய்திகள்மாப்பிள்ளையூரணியில் தூய்மைப் பணி : ஊராட்சி மன்றத் தலைவர் துவக்கினார்

மாப்பிள்ளையூரணியில் தூய்மைப் பணி : ஊராட்சி மன்றத் தலைவர் துவக்கினார்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட மாப் பிள்ளையூரணி பகுதி யில் தூய்மை பணியை ஊரா ட்சி மன்றத் தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

கிராமங்கள் முதல் மாநகரம் வரை அனைத்து பகுதிகளும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று தூய்மை பாரதம் திட்ட த்தை மத்திய அரசு தொ டங்கியது.
தமிழக அரசும் இதே போல் கிராம ஊராட்சித் திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிக் குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட் சியான ராஜ பாளையம் தாளமுத்துநகர், மாதாநகர் வடக்கு சோட்டையன் தோப்பு ஆகிய பகுதிகளில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை 50-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மூ லம் தூய்மை பணியை ஊ ராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்கத் தலைவருமான சரவணக்கு மார் தொடங்கி வைத்தார்.

ஊராட்சி மன்றத் தலைவர் சரவணக்குமார் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கிராம ஊராட்சி தான். ஊராட்சி வளர்ச்சி மூலம் தான் நாட்டின் வளர்ச்சியும் அமையும் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவு றுத்தி இருந்தார். தெற்கு மாவட்ட திமுக பொ றுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச் சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழி காட்டுதலின் படி மாப் பிள்ளையூரணி ஊராட் சியை, மாவட்டத்தில் தன்னிலை பெற்ற வளர்ச்சியடைந்த ஊர £ட்சியாக மாற்றுவதற்கு அனைத்து பணிகளும் தமிழக அரசின் உத்தரவின் படிமேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேவையற்ற பொரு ட்களை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கி மாப்பிள்ளையூரணி ஊராட்சி வளர்ச்சிக்கு அனைவரும் ஓத்து ழைக்க வேண்டும். பொது நலத்தோடு மக்க ளுக்காக உழைப்போம் என்றார்.

தூத்துக்குடி வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, மாப் பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க பா ண்டி, பெலிக்ஸ், மாப் பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், கௌதம் உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img