fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகள் 16 பேருக்கு ரூ.3.25 லட்சம் திருமண நிதியுதவி, 8 கிராம் தங்க நாணயம்- கோவை...

மாற்றுத்திறனாளிகள் 16 பேருக்கு ரூ.3.25 லட்சம் திருமண நிதியுதவி, 8 கிராம் தங்க நாணயம்- கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.3.25 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவி தொகைக்கான காசோலைகள், ரூ.3.25 லட்சம் மதிப்பில் தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயங்களை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஏப்.4) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

சம்மந்தப்பட்ட அலுவலர் களிடம் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பொதுமக்களிடமிருந்து இலவச வீடு வேண்டி 110 மனுக்களும், வீட் டுமனைப்பட்டா வேண்டி 11 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 11 மனுக்களும், இதரமனுக்கள் 315 என மொத்தம் 446 கோரிக்கை மனுக்கள் வந்தன.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் கை, கால் ஊன முற்றோர் – நல்ல நிலையில் உள்ளோரை திருமணம் செய்யும் நிதியுதவி திட்டத் தின் கீழ் 3 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி தொகைக்கான காசோலைகள், தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயங்களையும் பார்வையற்றோர் – நல்லநிலையில் உள்ளோரை திருமணம் செய்யும் நிதியுதவி திட்டத் தின் கீழ் 4 பயனாளி களுக்கு திருமண நிதியு தவி தொகைக்கான காசோலைகள், தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயங்களையும், காது கேளாதோர் நல்லநிலையில் உள்ளோரை திருமணம் செய்யும் நிதியுதவி திட்டத் தின் கீழ் 4 பயனாளிக ளுக்கு திருமண நிதியு தவி தொகைக்கான காசோலைகள், தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயங்களையும், மாற்றுத்திறனாளி மாற்றுத் திறனாளியை திருமணம் செய்யும் நிதியுதவி திட்டத்தின் கீழ் 5 பயனா ளிகளுக்கு திருமண நிதியுதவி தொகைக்கான காசோலைகள், தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயங்களையும் என மொத்தம் 16 பயனா ளிகளுக்கு ரூ.3.25இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவி தொகைக்கான காசோலைகள், ரூ.3.25இலட்சம் மதிப்பில் தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயங்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.

தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பித்துள்ள பணியாளர்களுக்கு உறுப்பி னர் அட்டைகளை வழங்கி னார்.
கடந்த 28.03.2022 முதல் 31.03.2022 வரை புவனேஸ்வர் நகரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கோவை மாவட்டத்திலிருந்து 7 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

அதில் வாக ராயன்பாளையத்தைச் சேர்ந்த, மனோஜ்குமார் சக்கர நாற்காலி போட்டி 100 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஆகிய போட்டிகளில் முதலிடத் தையும் இடிகரை பகுதியைச் சேர்ந்த கிருத் திகா வட்டு எறிதலில் இரண்டாம் இடத்தையும் பெற்றதற்கான பதக்கங்கள், சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கே.கவிதா, துணை ஆணையர் (கலால்) பி.சுபாநந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் எல்.சிவக்குமாரி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சுஜாதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், மாவட்ட மேலாளர் (தாட்கோ) செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img