fbpx
Homeபிற செய்திகள்“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” 50 துவக்கப் பள்ளிகளில் 2,586 பேர் பசியாறுகின்றனர்

“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” 50 துவக்கப் பள்ளிகளில் 2,586 பேர் பசியாறுகின்றனர்

நாமக்கல் மாவட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் முதற்கட்டமாக 50 துவக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 2,586 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

காலை உணவு குழந்தைகளின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு, இரவு உணவுக்குப் பின் ஏற்படும் நீண்ட இடைவெளியுடன் கூடிய பசியை தணிப்பதாக அமைகிறது.

காலை உணவு சாப்பிடாமல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்த இயலாமல் சோர்வடைந்து விடுகின்றனர். இதனைப் போக்கும் வகையில் முதல்வர் சட்டப்பேரவையில் 07.05.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதுடன், 15.09.2022 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் மதுரையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாணவ – மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், குறிப்பாக இரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல், பள்ளிகளில் மாணவ – மாணவிகள் வருகையை அதிகரித்தல் மற்றும் வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைத்தல் ஆகியவற்றிற்காக தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 50 துவக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 2,586 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

யார், யார்?
நாமக்கல் நகராட்சியில், மஜித் தெரு நகராட்சி உருது தொடக்கப்பள்ளி, கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளி, பதிநகர் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய 3 துவக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 596 மாணவ – மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

திருச்செங்கோடு நகராட்சியில் சின்னபாவடி நகராட்சி தொடக்கப்பள்ளி, செங்கோடம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி, மாங்குட்டை பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி, சட்டையம் புதூர் நகராட்சி தொடக்கப்பள்ளி, ராஜகவுண்டம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி, நெசவாளர் காலனி நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய 6 துவக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 738 மாணவ – மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் கடங்காத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சீக்குப்பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பூங்குளம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சோளக்காட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மங்களம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திட்டகிராய்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தின்னனூர் ஊர்புறம் காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அக்கரைவளவுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அடுக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
ஊர்முடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வீரகனூர்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நெடுங்காபுளிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரிப்பலாப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, செங்காட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கடம்பலம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பிலான்டூர்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சோலுடையப்பட்டி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, க.ஊர்புறம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஊர்கழிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பருத்திமுடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரியூர்கஸ்பா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தெகவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பனஞ்சாட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, இலங்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சுண்டக்காட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வெள்ளக்குழிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தேனூர்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பலாப்பாடிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வேலிக்காட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வால்குழப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, செங்கரை ஜி.டி.ஆர். துவக்கப்பள்ளி, நாய்க்கன்கோம்பை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எடப்புக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நவக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கீழ்செங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தண்ணிமாத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெ.ஊர்புறம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வடகாட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பூசனிக்குழிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நெவுரிக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய 41 துவக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 1,528 மாணவ – மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
நாமக்கல் நகராட்சியில் நாமக்கல் – சேலம் சாலையில் முதலைப்பட்டியில் மைய சமையற்கூடம் அமைக்கப்பட்டும், திருச்செங்கோடு நகராட்சியில் ராஜாகவுண்டன்பாளையம் துவக்கப்பள்ளியில் மைய சமையற் கூடம் கட்டப்பட்டும் காலை உணவுத்திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யப்பட்டு, சூட்டை தொடர்ந்து பாதுகாக்கும் பிரத்யேகமான கலன்களில் பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் அருகிலுள்ள சத்துணவுக்கூடங்களில் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

“அவசியமான மூன்று”
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை உதவி பேராசிரியர் சாந்தா ராணி தெரிவித்ததாவது:
சில மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதே இல்லை.

இப்படி காலை உணவை தவிர்ப்பதால் மாணவர்களின் கற்றல் திறன் குறைபடுகிறது. கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு இந்த 3 சத்தும் ரொம்ப, ரொம்ப அவசியம்.

இதுபோல அனைத்து ஊட்டசத்துக்களும் இருக்கற மாதிரியான காலை உணவு எடுத்துக்கனும். அதுக்காக தான் முதல்வர் காலை உணவு திட்டத்தை கொண்டுவந்திருக்காங்க.

இத்திட்டத்துல தினசரி உணவு பட்டியலில் உள்ள உணவு வகைகளில் கார்போஹைட்ரேட், ரிச்சா இருக்கு. புரோட்டீன், ஃப்பேட், மினரல்ஸ், விட்டமின்ஸ் நிறைஞ்ச உணவு திட்டம் தான் கொண்டு வந்திருக்காங்க.

இதனால மாணவ, மாணவிகளின் கற்றல் திறனும் மேம்படும். இந்த திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி என்றார்.

“சத்தான உணவு”
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் திருச்செங்கோடு நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவி.அ.கனிஷ்கா தெரிவித்ததாவது:

அப்பா அசோக் குமார். அம்மா மஞ்சுளா. ஒரு தங்கச்சி இருக்கா 4 வயசு. இப்போ காலை உணவு திட்டம் வந்ததால பள்ளிக்கூடத்துலேயே சாப்பிடறோம். சத்தான உணவு தர்றாங்க. இந்த திட்டம் வழங்கிய முதல்வருக்கு நன்றி என்றார்.

“சிரமம் குறைந்தது”
2-ம் வகுப்பு மாணவி ச.சிந்தியாவின் தந்தை சக்திவேல் தெரிவித்ததாவது:
சேலம் பைபாஸ் பகுதியில எங்க வீடு. அங்கிருந்து என் குழந்தையை பள்ளிக் கூடத்துக்கு அனுப்பறேன்.

முதல்வர் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தி இருக்காரு. நான் கூலி வேலைக்கு போற ஆளு. எனக்கு உணவு சமைச்சு குடுத்து ரெடி பண்ணி அனுப்பறதுக்கே வீட்ல மனைவி ரொம்ப சிரமபட்டுட்டு இருக்காங்க. குழந்தைகளுக்கும் காலையில, மதியம்னு ரெடி பண்ணி அனுப்பறது ரொம்ப சிரமமானது.

இப்ப பள்ளிக்கூடத்தில குழந்தைங்க சாப்பிடறதால, கொஞ்சம் அதிகமா உணவு சாப்பிடுவாங்க. இந்த திட்டத்துல குழந்தைகள் நலனும் நிறைய இருக்கு. உலக மக்களை புரட்டிபோட்ட விசயம் கொரோனா.

கொரோனா கால கட்டம் எல்லா குடும்பத்தையும் சாச்சிருச்சு. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில இருக்கறப்ப காலை உணவு திட்டம் கொண்டு வந்தது ரொம்ப வரவேற்கத்தக்கது. திட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி என்றார்.

தொகுப்பு:
சி.சீனிவாசன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
த.வடிவேல்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நாமக்கல் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img