தமிழக அரசின் நிதிநிலைமை சீராக இல்லை என்று தெரிந்தும் துணிச் சலுடன் செயல்பட்டு கொரோனா எனும் பெருந்தொற்றை எதிர்த்து போராடி வருகிறார், முதல்வர் ஸ்டாலின். ‘மக்கள் என் பக்கம்‘ என்ற பாணியில் மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக மக்களிடம் இருந்து கொரோனா நிவாரண நிதி திரட்டி இப்பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறார்.
முதல்வரின் செயல்பாட்டிற்கு மகுடம் சூட்டும் வகையில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார். கெரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடு மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கூறியுள்ளார்.
‘சொன்னதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம்‘ என்ற தாரக மந்திரத்தை நெஞ்சில் நிறுத்தி அதிரடி காட்டி வருகிறார், மு.க.ஸ்டாலின்.
மக்கள் நலம் சார்ந்து இயங்கும் இவரது செயல்பாட்டை அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.