ராமநாதபுரம் மாவட் டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள மாவீரன் சுந்தரலிங் கனார் சிலை அருகே வாஜ் பாய் திடலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 8- ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் இலவச சிலிண் டர் வழங்கும் விழா மாவட்ட தலைவர் இ.எம்.டி.கதிர வன் தலைமையில் நடை பெற்றது. முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சவரி முத்து பொன்னையா முன் னிலை வகித்தார்.
இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பய னாளிகளுக்கு சிலிண் டர் மற்றும் அடுப்பு வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித் தொகை மற்றும் 5 லட்சத் திற்கான காப்பீடு பற்றியும் விளக்கப்பட்டது.
முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய தலைவர் சத்திய மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், மாநில செயலாளர் சண்முகராஜா, முன்னாள் மாவட்ட தலை வர் முரளித ரன், மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, மாவட்ட ஊடகபிரிவுத் தலைவர் எஸ்.பி.குமரன் உட்பட பா.ஜ.க தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.