fbpx
Homeபிற செய்திகள்முதுமலை புலிகள் காப்பகத்தில் ரிவால்டோ யானை கூண்டில் அடைக்கப்பட்டது

முதுமலை புலிகள் காப்பகத்தில் ரிவால்டோ யானை கூண்டில் அடைக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்ப கத்திலுள்ள வாழைத் தோட்டம் பகுதியில் வளர்ப்பு பிராணி போல மக்களுடன் இணக்கமாக பழகிவந்த ரிவால்டோ என்றழைக்கப்படும் ஆண் காட்டு யானை சிகிச் சைக்காக கரால் எனப்படும் கூண்டில் புதன்கிழமை காலை அடைக்கப்பட்டது.

யானை தந்தத்தின் அருகே ஏற்பட்டிருந்த காயத்தால் மிகவும் அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க வனத்துறை தீவிர முயற்சி எடுத்தனர். ஆனால் அழைத்துச் செல்லும்போது முகாமுக்கு செல்ல மறுத்து தனது வசிப்பிடத்திற்கே திரும்பி வந்துவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் அதன் வசிப்பிடமான வாழைத் தோட்டம் பகுதியிலேயே கரால் அமைத்து கடந்த நான்கு நாள்களாக பழம், கரும்பு உள்ளிட்ட அதன் விருப்ப உணவுப் பொருள் களை கராலுக்குள் வைத்தனர்.

ரிவால்டோவும் தனது வீட்டுக்குள் செல்வது போல கராலுக்குள் சென்று தனது விருப்ப உணவுகளை உண்டு மகிழ்ந்தது.

தன்னை கூண்டிலடைக்கிறார்கள் என்ற பயமின்றி சொந்த வீடு போல பழகி கராலுக்குள் சென்று வந்த ரிவால்டோவை புதன்கிழமை காலை கூண்டில் அடைத்தனர். இனி அதற்கான சிகிச்சை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img