தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், இயேசு அழைக்கிறார் மற்றும் சீஷா தொண்டு நிறுவன தலைவருமான டாக்டர் பால் தினகரன் வாழ்த்து தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
மாண்புமிகு டாக்டர் மு.க.ஸ்டாலின், சென் னையை சிங்கார சென் னையாக மாற்றியவர்.
தான் சொல்வதையெல்லாம் மக்களின் நலன் கருதி செவ்வனே செய்து முடிப்பவரும், பலகோடி மக்களின் நலன் காக்கவும், அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையவும் விடியலாகவும் திகழ்கிறார்.
சென்னை, அடையாறில் எனது தகப்பனார் நினைவாக டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் சாலையை நிறுவியவர். மேலும் உறுப்பினர்களின் மக்கள் பணிசிறக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் பால் தினகரன் தெரிவித்துள்ளார்.