fbpx
Homeபிற செய்திகள்மு.க. ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்திப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கம்

மு.க. ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்திப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கம்

தமிழக முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்தித்து பேசியுள்ளார். இதேபோல் டி.ஜி.பி. திரிபாதி, சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோரும் ஸ்டாலினை சந்தித்தனர்.

சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக தேர்வாகியுள்ளார். வருகின்ற 7ம் தேதி அவரது பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து கொரோனா காலம் என்பதால் அதற்கான ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு கட்டுப் பாடுகளும் விதிக்கப் பட்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போதுள்ள சூழல் குறித்து முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினிடம், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், டி.ஜி.பி. திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரடியாகவே ஆலோ சனை நடத்தினர்.

ஊரடங்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டு அதற்கான மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மு.க.ஸ்டாலினிடம் விளக்கம் அளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img