கோவை சாய்பாபா காலனி பகுதியில் சாலை மீது சாலை போடு வதால் வீடுகள் சாலை மட்டத் தில் இறங்கி மழை நீர் தேங்குவதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை சாய்பாபா காலனி 12வது வார்டு சின்னம்மாள் வீதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே உள்ள சாலையை தோண் டாமல் சாலை மீது சாலை போடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் இன்று அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெறும் இடத் திற்கு சென்ற பொது மக்கள், பணிகளை நிறுத்தக்கோரியும் தார் சாலையை முறையாக அமைக்க கோரியும் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து முன்னாள் மேயர் வெங்கடாசலம் கூறுகையில். “இந்தப் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத் தோம்.
அதன்படியே பல இடங்களிலும் சாலை அமைத்தனர். ஆனால் முன்னதாக இருந்த சேதமடைந்த பழைய சாலைகளை தோண்டி அகற்றாமல் அதன் மீதே புதிய சாலை அமைக் கின்றனர். இதனால் சாலை மேடு ஆகிறது.
இதனால் சாலையோரம் உள்ள வீடுகளின் மட்டத்திற்கு மேல் சாலை அமைகிறது.
மழைக்காலங்களில் வீடுகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவ திப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை முறையாக தோண்டி அதன் பின்னர் அமைக்க வேண்டும்.” என் றார்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட் டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பழைய சாலையை தோண்டி அகற்றிய பின்னரே புதிய சாலை போடப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் காய்த்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.