fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு

மேட்டுப்பாளையம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகம் (ATL) அமைக்கபட்டுள்ளது. இதனைப் பள்ளி தாளாளர் சந்திரா ரூபன் திறந்து வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மேட்டுப்பாளையம் அறிவியல் மன்றத்தைச் சேர்ந்த மணி, முகமது பாதுஷா, மெகபூம் நிஷா மற்றும் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முரளி தரன் வரவேற்புரை வழங்கினார். பள்ளி செயலாளர் தேவகுமார் தலைமை தாங்கினார். இந்த ஆய்வகமானது மாணவர்களின் அறிவியல் மற்றும் கற்பனைத் திறனை செயல்படுத்தும் தளமாக அமைந்துள்ளது என்று பள்ளி நிர்வாகி ரூபன் சுகுமார் பேசுகையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இறுதியில் ஹோலி ஏஞ்சல்ஸ் குழுமத்தின் சார்பாக ரூபி மேரி நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img