fbpx
Homeபிற செய்திகள்‘மொழி இன உணர்வுடன் தமிழர்கள் வாழ பாவேந்தரின் படைப்புகள் துணை நிற்கின்றன’

‘மொழி இன உணர்வுடன் தமிழர்கள் வாழ பாவேந்தரின் படைப்புகள் துணை நிற்கின்றன’

தமிழர்கள் மொழி இன உணர்வுடன் வாழ பாவேந்தரின் படைப்புகள் துணை நிற்கின்றன என மருத்துவப் பணிகள் இயக்குநர் ஜெய.இராஜமூர்த்தி என்று பேசி னார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் தமிழ்நாடு அரசு நிறுவிய பாவேந் தர் பாரதிதாசன் அறக்கட் டளைப் பொழிவு நடை பெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் முதுமுனைவர் இராம.கதிரேசன் தலைமை தாங்கி பேசும் போது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமி ழுக்கும் தமிழிசைக்கும் பெரும் பங்காற்றிய பல்க லைக்கழகம்.

தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கட்டுரை வெளியீட் டில் முன்னிலையில் இருக் கும் பெருமை கொண்டது என்றார்.

சிறப்பு விருந்தினர் தமிழ் நாடு அரசின் மருத்துவ நலப்பணிகள் இயக்குநர் ஜெய.இராஜமூர்த்தி பேசும்போது, பாவேந்தர் பாரதிதாசன் பாரதியின் படைப்புகளினால் அறிமுகமாகி தொடர் வாசிப்பினால் நண்பராகி பின்னர் பாரதி கவி தா மண்டலத்தின் முதன்மைக் கவியாக வளர்ந்தவர்.

தமிழின் பழம்பெருமைகளைப் பாடி, தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் மொழியின் வளர்ச்சிக்கும் பாடல்களைப் பாடியவர். நிகழ்காலத்திற்கும் தமிழர் கள் மொழி உணர்வினையும் இனவுணர்வினையும் கொள்ள பாவேந்தரின் படைப்புகள் துணை நிற் கின்றன என்றார்.

பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் சீத் தாராமன் வாழ்த்துரை வழங்கினார்.
பல்கலைக்கழக ஆட் சிக்குழு உறுப்பினர் முது முனைவர் அரங்க.பாரி பேசினார். தமிழியல் துறைத் தலைவர் முனைவர் கோ.பிலவேந்தரன் வரவேற்றார்.

தமிழியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் இரா.மலர்விழி நன்றி கூறினார்.
மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் முனைவர் இரா.தி.சபாபதி மோகன், துணைவேந்தரின் நேர்முகச் செயலாளர் முனைவர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img