fbpx
Homeபிற செய்திகள்யோகாசனத்தில் கும்மிடிப்பூண்டி மாணவி கின்னஸ் சாதனை

யோகாசனத்தில் கும்மிடிப்பூண்டி மாணவி கின்னஸ் சாதனை

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூர்மாசனம் எனப்படும் யோகாசனத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் – பிரியா தம்பதியின் மகள் சாஸ்திஹா (வயது 18). பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். கும்மிடிப்பூண்டியில் உள்ள ஸ்ரீ சங்கரி யோகா மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏழு ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வருகிறார்.

திருப்பூரைச் சேர்ந்த 25 வயது பெண் ஆர்த்தி, கூர்மாசனத்தில் ஒரு மணி நேரம் இரண்டு நிமிடம் இரண்டு வினாடிகள் தொடர்ந்து நின்று கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

அவரது சாதனையை முறியடித்து, கும்மிடிப்பூண்டி மாணவி சாஸ்திஹா ஒரு மணி நேரம், 6 நிமிடம் ஒரு வினாடி நின்று கின்னஸ் சாதனை படைத்தார்.

மாணவி சாஸ்திஹா சாதனை படைக்க, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் ஏ.ஆர்.எஸ். இரும்பு தொழிற்சாலை நிர்வாகம், நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த மாணவி சாஸ்திஹா, யோகா ஆசிரியை சந்தியா, சாதனை படைக்க நிதியுதவி அளித்த தனியார் துறை இயக்குனர் சத்தியநாராயண மூர்த்தி ஆகியோரை கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img